அப்பவே கட்ட மீசைதான்!...வைரலாகும் விஜயகாந்தின் வாலிப பருவ புகைப்படம்...

by சிவா |
vijayakanth
X

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த். மதுரையில் ரைஸ் மில் நடத்தி கொண்டிந்த விஜயராஜ் சினிமா ஆசையில் சென்னை வந்து தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார்.

துவக்கம் முதலே அனல் பறக்கும் சண்டை காட்சிகளில் நடிக்க துவங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக மாறினார். அவர் நடித்த பல படங்கள் சில்வர் ஜூப்ளி திரைப்படங்களாகும், பி மற்றும் சி செண்டர்களில் ரஜினி படங்களை விட விஜயகாந்தின் படங்கள் அதிக வசூலை ஈட்டியது.

vijayakanth

தற்போது உடல் நலக்குறைவால் சினிமாவில் அவர் நடிப்பதில்லை. மேலும், தீவிர அரசியலிலும் அவர் ஈடுபடவில்லை. வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், சினிமாவில் நுழைவதற்கு முன் மதுரையில் தனது நண்பர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கட்ட மீசை, பெல்ஸ் பேண்ட், கட்டம் போட்ட சட்டை என மிகவும் அழகாக இருக்கிறார் கேப்டன்..

vijayakanth

Next Story