Cinema News
அசிங்கமாக திட்டிய திரைப்பிரபலங்கள்!.. கேப்டனின் ரியாக்ஷன் இதுதான்!. நடிகர் சொன்ன தகவல்!..
தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு நுழைந்தவர் விஜயகாந்த். பல அவமானங்களையும் சந்தித்து திரையுலகில் முன்னேறியவர். அதனால், நாம் வளர்ந்தபின் பலருக்கும் உதவ வேண்டும். பலரையும் தூக்கிவிட வேண்டும் என முடிவெத்தார். அப்படியே செய்தும் காட்டினார். பல நடிகர்களை, இயக்குனர்களை, தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளையே தனது தேமுதிக கட்சியில் முக்கிய பொறுப்புகளை கொடுத்து அழகு பார்த்தார். தனது வாழ்வில் பல விமர்சனங்களை பார்த்தவர். அவர் நடிக்க வாய்ப்பு கேட்டபோது ‘அதான் ஒரு ரஜினிகாந்த் இருக்கிறாரே.. விஜயகாந்த் எதற்கு?’ என்று அவரிடம் கேட்டார்கள்.
இதையும் படிங்க: நான்தான் அதுல பெஸ்ட்டுன்னு நினைச்சேன்!. ஆனா விஜயகாந்த் அசத்திட்டாரு!.. ராதா என்ன சொல்றார் பாருங்க!…
ஒருபடத்தில் சில நாட்கள் நடித்த நிலையில் அவரை அதிலிருந்து தூக்கினார்கள். ‘என்ன காரணம்?’ என விஜயகாந்த் கேட்டதற்கு ‘உன் தமிழ் உச்சரிப்பு நன்றாக இல்லை’ என சொன்னார்கள். அப்போது மார்க்கெட்டில் இருந்த நடிகைகள் விஜயகாந்தின் நிறத்தை காரணமாக காட்டி அவருடன் நடிக்க மறுத்தார்கள். படப்பிடிப்பு தளத்தில் நடிகைக்குக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூட விஜயகாந்துக்கு கிடைக்காது.
இந்த அவமானங்கள்தான் விஜயகாந்தை ஒரு பக்குவப்பட்ட மனிதராக மாற்றியது. அவரை பற்றி திரையுலகை சேர்ந்த பலரும் பாராட்டியே பேசுவார்கள் என்றாலும் அரசியல் காரணமாக சிலர் அவரை கடுமையாக திட்டியும் பேசியிருக்கிறார்கள். இதில், முதலிடத்தில் இருப்பது வடிவேலுதான். விஜயகாந்தை பொது மேடைகளில் அவ்வளவு அசிங்கமாக யாரும் விமர்சித்திருக்க முடியாது. அந்த அளவுக்கு பேசினார். ஆனால், விஜயகாந்த் அந்த தேர்தலில் வெற்றிபெற்று எதிர்கட்சி தலைவராகவும் அமர்ந்தார்.
இதையும் படிங்க: ரஜினியை பதறவிட்ட கேப்டன் விஜயகாந்த்!.. பாத்ததும் பயந்துட்டாரு!.. நடிகர் சொன்ன தகவல்…
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய நடிகர் ரஞ்சித் ‘திரையுலகை சேர்ந்த பலரும் அரசியல் மேடைகளில் அவரை கடுமையாக விமர்சித்தார்கள். கேட்டால் நமக்கே கோபம் வரும் அளவுக்கு பேசினார்கள். ஒருமுறை அப்படி பேசிய ஒரு நடிகர் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தபோது விஜயகாந்துக்கு வணக்கம் சொல்லிவிட்டு போனார்’
நான் விஜயகாந்தின் ‘என்ன கேப்டன். உங்களை அப்படி திட்டினாரு.. இப்ப வந்து வணக்கம் சொல்றாரு.. உங்களுக்கு அவர் மேல கோபம் இல்லையா?’ எனக்கேட்டேன். அதற்கு அவர் ‘அவன் மேல என்ன தப்பு இருக்கு. அவன் ஒரு கட்சியில இருக்கான். கட்சி தலைமை என்ன சொல்றாங்களோ அதை செய்யறான்.. அதுக்கு அவனுக்கு பணமும் கிடைக்காது. என்னை திட்டுவதால் அவனுக்கு பணம் கிடைக்கிறது எனில் எனக்கு அதில் சந்தோஷம்தான்’ என சொன்னார். இப்படியும் ஒருவர் இருப்பாரா என அசந்துபோனேன்’ என ரஞ்சித் கூறியிருந்தார்.