கறி விருந்தா? தக்காளி சாதமா? கமலுக்கு டஃப் கொடுத்த விஜயகாந்த்...!

by Rohini |   ( Updated:2022-08-30 10:01:55  )
kamal_main_cine
X

தமிழ் சினிமாவில் பிரபலங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த நடிகராக மனிதராக திகழப்படுபவர் நடிகர் விஜயகாந்த். இவர் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கேப்டனாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். அரசியலில் இருந்த ஆர்வம் காரணமாக சினிமாவை விட்டு விலகி பொதுவாழ்வில் நுழைந்தார்.

kamal1_cine

இவர் சினிமாவில் இருக்கும் போதே தெரிந்தவர் தெரியாதவர் என பாரபட்சம் பார்க்காமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்து அனைவரின் மத்தியிலும் நல்ல பேரை எடுத்தவர். மேலும் இவரால் தான் பல படக்கம்பெனிகள் இன்று வரை கரி விருந்தோடு சாப்பாடு தந்து வருகின்றனர்.

இதையும் படிங்கள் : அவர் இல்லை என்றலும் நான் இந்த இடத்திற்கு வந்திருப்பேன்… தளபதி விஜய் கூறிய ஷாக்கிங் தகவல்.!

kamal2_cine

இவர் தான் இந்த முறையை முதன் முதலில் கொண்டு வந்தவர் என அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதை நினைவு கூறும் போது தான் இன்னொன்றை நாம் அறிந்து கொள்வது அவசியமாகின்றது. ஒரே நேரத்தில் ஏவிஎம் ஸ்டூடியோவில் விஜயகாந்த்தின் உழவர் மகன் படப்பிடிப்பும் கமலின் நாயகன் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாம்.

kamal3_cine

இதையும் படிங்கள் : மைனா படத்துல நடிக்க வேண்டியது அந்த ஹீரோ…அட இது தெரியாம போச்சே!….

இங்கு விஜயகாந்த் படப்பிடிப்பில் உள்ள அனைவருக்கும் கரி விருந்தோடு சாப்பாடு போட்டிருக்கிறார். அங்கு கமல் நாயகன் படப்பிடிப்பில் வெறும் தயிர் சாதமும் தக்காளி சாதமும் போடப்பட்டதாம். இதன் மூலம் தான் விஜயகாந்த் படப்பிடிப்பில் கரி விருந்து போடப்படுகிறது என பிரபலமாகி அனைத்து கம்பெனிகளும் அசைவ விருந்தை போட ஆரம்பித்துள்ளனர். மேலும் விஜயகாந்த் தன் படத்தின் சம்பளத்தில் 3 லட்சத்தை விருந்து சாப்பாட்டுக்காக செலவு செய்ய எடுத்துக் கொள்ள சொல்வாராம்.

Next Story