
Cinema News
வெளியானது விஜயகாந்தின் புதிய புகைப்படங்கள்… செம வைரல்….
உடல்நிலை காரணமாக தீவிர அரசியல் மற்றும் சினிமாவிலிருந்து விலகியிருக்கிறார் விஜயகாந்த். வீட்டில் எப்போதும் ஓய்வில் இருக்கும் அவரின் புகைப்படங்கள் அவ்வபோது வெளியாவதுண்டு..
சமீபத்தில் தொண்டர் ஒருவர் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சியடையை வைத்தது. ஏனெனில், இது விஜயகாந்தா என பார்ப்பவர் அனைவரும் அதிர்ச்சி அடையும் அளவுக்கு அவரின் தோற்றம் இருந்தது. எனவே, அவர் விரைவில் நலமடைய வேண்டும் என பலரும் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தனது பிறந்த நாளை விஜயகாந்த் மற்றும் தனது 2 மகன்களுடன் கொண்டாடினார். இந்த புகைப்படங்களை விஜயகாந்த் தனது டிவிட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் விஜயகாந்த் உடல்நலம் குணமடைந்து வரவேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.