பார்த்திபன் ஹீரோ ஆக காரணமே விஜயகாந்துதான்!. ஒரு செம பிளாஷ்பேக்!…

by சிவா |   ( Updated:2025-04-23 10:13:41  )
parthiban
X

Vijayakanth: இயக்குனர் பாக்கியராஜிடம் உதவியாளராக இருந்து சினிமாவை கற்றுக்கொண்டவர் பார்த்திபன். சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தவர். துவக்கத்தில் சில நாடகங்களில்லாம் நடித்திருக்கிறார். பாக்கியராஜ் இயக்கிய சில தாவணி கனவுகள் படத்தில் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருப்பார்.

அதன்பின் சினிமாவை இயக்கலாம் என்கிற நம்பிக்கை வந்தபின் ஒரு கதையை எழுதினார் அப்போது அந்த கதைக்கு கேள்விக்குறி என பெயர் வைத்தார். ரஜினி, கமல் உள்ளிட்ட பலரிடமும் கதை சொன்னார். யாரும் ஆர்வம் காட்டவில்லை. அவர் கதை சொன்ன ஹீரோக்களில் விஜயகாந்தும் ஒருவர்.

இந்த கதை விஜயகாந்துக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், பார்த்திபன் மீது நம்பிக்கை இல்லை. ஏனெனில் ஒரு புது முக இயக்குனரை நம்பி படத்தில் நடிக்க விஜயகாந்த் விரும்பவில்லை. எனவே, கதை, திரைக்கதை, வசனம் பார்த்திபன் எழுதட்டும். வேறொரு இயக்குனரை வைத்து படமாக எடுப்போம் என விஜயகாந்த் நினைத்தார். ஆனால், பார்த்திபன் அதற்கு சம்மதிக்கவில்லை.

அதோடு, சுந்தரம் என்கிற தயாரிப்பாளரிடம் சொல்லி அவரும் சம்மதித்துவிட்டார். ஹீரோ மட்டும் உறுதியாகாமல் இருந்தது. அந்த கதையை கேட்ட விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் ‘இந்த கதையில் நீ நடிப்பதை விட கதையை சொன்ன மூர்த்தியே (பார்த்திபனின் நிஜப்பெயர்) நடித்தால் சரியாக இருக்கும் என சொல்லியிருக்கிறார்.

உடனே தயாரிப்பாளர் சுந்தரத்திற்கு போன் போட்ட விஜயகாந்த் ‘இந்த கதையில் மூர்த்தி நடித்தால் சரியாக இருக்கும். தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய நடிகர் கிடைப்பார்’ என சொல்லிவிட்டார். அதேபோல், இந்த கதையில் நடிப்பது தொடர்பாக சுந்தரமும், பார்த்திபனும் ரஜினியை சந்தித்து பேசியபோது அவரும் அதையே சொல்லி இருக்கிறார்.

‘இந்த கதையை நீங்கள் இவரை வைத்தே எடுங்கள். ஹிட் அடிக்கும்’ என சொல்ல அப்படி உருவான படம்தான் புதிய பாதை. இந்த படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக சீதா நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

Next Story