தங்கச்சின்னு கூப்பிட்ட பொண்ணு கூட ஜோடியா?.. நடிக்க மறுத்த விஜயகாந்த்.. அட அவரா!..

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் போல் ஒரு தங்கமான மனிதர் கிடையவே கிடையாது ஏகப்பட்ட பிரபலங்கள் அவரது மறைவின் போது அவரைப் பற்றி பாராட்டி பல விஷயங்களை பேசி வந்தனர். தென்னிந்திய திரைப்பட சங்கம் சார்பில் நடைபெற்ற விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் பல நடிகைகள் கலந்து கொண்டு விஜயகாந்த் பற்றி புகழ்ந்து பேசினர்.
சினிமாவில் அனைவருக்கும் சமமான சாப்பாடு மற்றும் படத்தில் நடிக்கும் ஹீரோவுக்கு என்ன சாப்பாடோ புரொடக்ஷன் பாய்க்கும் அதே சாப்பாடுதான் என்கிற விஷயத்தை கொண்டுவந்தது விஜயகாந்த் தான் என ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களும் அவரது பெருமையை பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: மனைவி பட வெற்றி விழாவுக்கு போகாத சூர்யா!.. இதுதான் காரணம்.. மேடையில் போட்டு உடைத்த ஜோதிகா!..
ஜே பேபி படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். விரைவில் அந்த படம் வெளியாக உள்ள நிலையில் அதற்கான புரமோஷனில் கலந்து கொண்டுள்ள ஊர்வசி ஏகப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், விஜயகாந்த் பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை கூறியுள்ளார்.
விஜயகாந்த் தன்னை எப்போதும் தங்கச்சி என்று தான் அழைப்பார். அதற்காகவே என்னை பல படங்களில் அவர் ஹீரோயினாக போடவில்லை. ஒரு சில படத்தில் ஹீரோயினாக கமிட் ஆன போது கூட இவளை ஏன்ப்பா ஹீரோயினா போட்டீங்க, தங்கச்சி தங்கச்சின்னு வாயாற கூப்பிட்டு இருக்கேனே எனக் கூறுவார். ரொமான்ஸ் காட்சிகளில் கூட கண்ணை பார்க்கக் கூட மாட்டார். தள்ளி தள்ளியே நடிப்பார் என்றார். வேங்கையின் மைந்தன், வெள்ளை புறா ஒன்று மற்றும் தென்னவன் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: படத்துக்காக உடம்புல அந்த பார்ட்டையே டேமேஜ் பண்ண சூரி!.. விருது வாங்கணும்னா சும்மா இல்ல பாஸ்!
சூட்டிங் முடிந்து கார் ரிவர்ஸ் போயிட்டு வருவதற்காக காத்திருக்கும் போது பார்த்து விட்டால் கூட காருக்கு ஏன் காத்திருக்கின்றனர். பெண்களை ஏன் ரோட்ல நிக்க வைக்கிறன்னு டிரைவரை திட்டுவார் என விஜயகாந்த் பற்றி பல விஷயங்களை பேசியிருக்கிறார்.