மதுரைக்கு அருகே உள்ள ஒரு குக்கிராமத்தில் செல்வம் நிறைந்த வீட்டில் பிறந்த விஜயகாந்த், சினிமாவில் நடித்தே ஆகவேண்டும் என்ற வெறியோடுதான் சென்னைக்கு கிளம்பினார். அங்கே சினிமா வாய்ப்புக்காக படாத பாடுபட்ட விஜயகாந்த், “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த், ரஜினி-கமல் ஆகியோருக்கு இணையான கதாநாயகனாக ரசிகர்களின் மனதில் தனியான ஒரு இடம்பிடித்தார். அதன் பின் ரசிகர்களின் கேப்டனாக உயர்ந்து தமிழ் மக்களின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தார்.
விஜயகாந்த் தனது சொந்தகிராமத்தில் அரிசி ஆலையை நிர்வாகம் செய்து கொண்டிருந்தபோது, சினிமா பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அப்போது அவரது நெருங்கிய பள்ளிக்கால நண்பராக இருந்த இப்ராஹிம் ராவுத்தர் கதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
அந்த காலகட்டத்தில் ரஜினிகாந்த் தமிழின் முன்னணி நடிகராக வளர்ந்துவந்தார். பொதுவாக சினிமாக்களில் ஹீரோக்கள் சிவப்பாகத்தான் இருப்பார்கள். அந்த வழக்கத்தை ரஜினிகாந்த் உடைத்தார். ஆதலால் விஜயகாந்த்திற்கும் நடிக்க வேண்டும் என ஆசை வந்தது. இப்ராஹிம் ராவுத்தரும் விஜயகாந்த்திற்கு துணையாக இருக்க முடிவு செய்தார்.
அப்போது மதுரையில் இயங்கிக்கொண்டிருந்த சேனா பிலிம்ஸின் நிறுவனர் ஒருவர் விஜயகாந்த்திற்கும் ராவுத்தருக்கும் நெருக்கமான நண்பராக திகழ்ந்து வந்தார். அவர் விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வாய்ப்பளிப்பதற்காக உதவினார். அதன்படி ஒரு திரைப்படத்தில் நடிக்க விஜயகாந்த்திற்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதற்காக விஜயகாந்த்தும், ராவுத்தரும் சென்னை வந்து இறங்குகிறார்கள்.
எனினும் அதன் பிறகு அந்த படத்தை குறித்த எந்த தகவலும் விஜயகாந்த்திற்கு கிடைக்கவில்லை. அதன் பின் ஒரு நாள் பத்திரிக்கை ஒன்றில் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக ஒரு செய்தியை படிக்கிறார் விஜயகாந்த். அந்த செய்தியை பார்த்தவுடன் நேராக அந்த நிறுவனத்திற்குச் சென்று “நான் இந்த படத்தில் நடிக்கிறேனா இல்லையா?” என கேட்டார்.
இதையும் படிங்க: உண்மையை சொன்னதால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த சந்திரபாபுவின் மனைவி… அப்படி என்ன நடந்தது தெரியுமா??
அதற்கு அந்த நிறுவனத்தின் உரிமையாளர் “உனக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக வரவில்லை. அதனால் உன்னை படத்தில் இருந்து நீக்கிவிட்டோம்” என கூறினாராம். அதாவது விஜயகாந்த் அப்போது மதுரை பாஷையில் பேசிக்கொண்டிருந்தார். ஆதலால் அவருக்கு வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.
அந்த நிறுவனத்தில் உரிமையாளர் இவ்வாறு கூறியவுடன் “நீங்கள் எப்படி பேசி நடிக்கச் சொல்லுகிறீர்களோ நான் அப்படி பேசி நடிக்கிறேன்” என கூறியுள்ளார். ஆனால் அப்படியும் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. “நமக்கு தமிழ் உச்சரிப்பு வரவில்லை என்ற காரணத்தால் கிடைத்த வாய்ப்பும் பறிப்போய்விட்டதே” என்ற சோகத்தில் இருந்த விஜயகாந்த், “இனி இந்த சினிமாவில் நடிக்காமல் விடப்போவது இல்லை, எப்படிப்பட்ட நிலை ஏற்பட்டாலும் சினிமாவில் ஹீரோ ஆகி காட்டுவேன்” என முடிவெடுத்து அதன் பின் சென்னையில் நிரந்தரமாக தங்க முடிவெடுத்தாராம். அதன் பின் பல போராட்டங்களுக்குப் பிறகு விஜயகாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார்.
டிவி பேட்டி…
தமிழ் சினிமாவில்…
Kamalhaasan: 4…
SK 25:…
பிலிம் இன்ஸ்டிட்யூட்…