ஜெயலலிதாவை விட்டு கொடுக்காமல் பேசிய விஜயகாந்த்... எல்லாத்துக்கும் காரணம் அந்தக் கேள்விதான்!

by sankaran v |   ( Updated:2024-09-01 15:34:46  )
vijayakanth
X

vijayakanth

கேப்டன் விஜயகாந்த் நடித்த படங்களில் அவர் அரசியல் வசனம் பேச ஆரம்பித்தால் அனல் பறக்கும். மனிதர் புள்ளி விவரங்கள் கொண்ட நீண்ட டயலாக்கையும் அசால்டாகப் பேசி அசத்துவார். அது தான் அவரோட தனி ஸ்டைல். அப்படி பேசுவதற்கு இனி யாரும் இல்லை. வரவும் மாட்டார்கள்.

கேப்டன் பிரபாகரன், ரமணா, ஏழை ஜாதி, அரசாங்கம் ஆகிய படங்களைப் பார்த்தால் தெரியும். அவரது கம்பீரமான குரலும் அந்த டயலாக்கும் படம் பார்க்கும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து விடும்.

Also read: ஆக்சன் கிங்.. கலெக்‌ஷன் கிங்.. டயலாக் டெலிவரி கிங்!.. ரஜினி யாரை சொல்லியிருக்கார் பாருங்க!…

அரசியல் கதைகளில் எல்லாம் நல்லா நடிக்கிறீங்க. ஏன் நீங்க சிஎம்மா ஆகக்கூடாதுங்கறது தான் எங்களோட ஆசை. லண்டன்ல இருந்து இங்க வந்துருக்கும்போது ஜெயலலிதாவைப் பத்தி சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க.

அவங்க வீட்டை விட்டே எழுந்திருச்சிக்க மாட்டாங்க. ஆனா 5 மணி நேரத்துக்கு முன்னாடியே ரோடு பிளாக். ரொம்ப கஷ்டப்பட்டோம். அப்படி ஒரு நடிகையா இருந்து வந்தவங்க தான் சிஎம்மா ஆகியிருக்காங்கன்னு ரசிகை ஒருவர் கேட்கிறார்.

அதற்க கேப்டன் விஜயகாந்த் சொன்ன பதில் தான் இது. அதாவதுங்க... நாம வெளியே இருந்து பார்க்குறதுக்கு ஒரு மாதிரியா இருக்கும். அவங்க பாதுகாப்புக்கு. நாம அந்த இடத்துல இருந்தா தானே எதையும் சொல்ல முடியும். அவங்க அவங்களுக்குன்னு சில காரணங்கள் இருக்கு. அதை வெளியேயும் அவங்க சொல்ல முடியாது. வீட்டுக்கு வீடு வாசப்படி.

Yelai jaathi

Yelai jaathi

அது எல்லாருக்குமே இருக்கு. ஏதோ ஒரு இதுல பிரச்சனை இருக்கும். அந்தப் பிரச்சனைகளைப் பேசணும். கதைகளைப் பேசணும். கால்ஷீட்டைப் பேசணும்.

நடிகர்களுக்கே இவ்வளவு இருக்கும்போது ஒரு அரசியல்வாதிக்கு எவ்வளவு இருக்கும்னு நீங்க யோசிச்சிப் பாருங்க. அதிகாரிகள் வரலாம். அவங்களோட டிபார்ட்மென்ட் கரெக்டா இருக்கணும்கறதுக்காக அந்த அதிகாரிகளுக்கு திருப்திப்படுத்தணும்கறதுக்காக முன்கூட்டியே இருக்கலாம்.

அவங்களுக்கு என்ன வேலை இருக்குங்கறது நமக்குத் தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இப்போதெல்லாம் சுயநலவாதிகள் பெருகி வரும் நிலையில், ஒரு சாதாரண நடிகராக இருந்த விஜயகாந்த் அப்போதே அடுத்தவர்கள் நிலையில் இருந்து யோசித்துப் பதில் சொல்லி இருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு பெருந்தன்மை மிக்கவர் என்பது தெரிகிறது அல்லவா.

Next Story