Cinema News
வெறித்தனமான லுக்கில் விஜயகாந்த் மகன்!.. தெறிக்கவிடும் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ..
80களில் சினிமாவில் நடிக்க துவங்கி படிப்படியாக உயர்ந்து பெரிய நடிகராக மாறியவர் விஜயகாந்த். மதுரையிலிருந்து சென்னை வந்து வாய்ப்புகள் தேடி பல அவமானங்களை சந்தித்து பின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியவர். ஒருகட்டத்தில் ரஜினி, கமல் படங்களுக்கே டஃப் கொடுத்தார்.
விஜயகாந்த் 1990ம் வருடம் பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள். இதில் இளையவர் சண்முக பாண்டியன். இவருக்கும் அப்பாவை போலவே சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை. சகாப்தம் என்கிற படத்தில் அறிமுகமானார். இப்படம் 2015ம் வருடம் வெளியானது. அதன்பின் மதுரை வீரன் என்கிற படத்திலும் நடித்தார்.
இதையும் படிங்க: பாடலை கேட்டு பூரித்து போன விஜயகாந்த்!.. இளையராஜாவுக்கு என்ன செய்தார் தெரியுமா?…
விஜயகாந்தின் மகனாக இருந்தும் இவருக்கு சரியான படங்கள் அமையவில்லை. அதன்பின் ‘தமிழன் என்று சொல்’ என்கிற பட அறிவிப்பு சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தில் மகனுடன் இணைந்து விஜயகாந்தும் நடிப்பதாக இருந்தது. ஆனால், அப்படம் டேக் ஆப் ஆகவில்லை. தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் சண்முக பாண்டியன் நடிக்கவுள்ளார்.
இன்று விஜயகாந்தின் பிறந்தநாள் என்பதால் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என நேற்றே அறிவிக்கப்பட்டது. அதன்படி நடிகர் விஜயகாந்தின் டிவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘படைத்தலைவன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதோடு டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: எல்லோர் முன்னிலையிலும் கன்னத்தில் பளார்விட்ட விஜயகாந்த்.. வன்மம் வளர்த்து பழிவாங்கிய வடிவேலு!..
விஜே கம்பைன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்தை அன்பு என்பவர் இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் தொடர்பான விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதால் விஜயகாந்தின் ரசிகர்கள் இப்படத்திற்கு வாழ்த்துக்களை சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோபத்தில் விஜயகாந்த் என்னை எட்டி உதைச்சாரு!.. நாங்க போடாத சண்டையா?- கூலா சொன்ன மன்சூர் அலிகான்…