தமிழ் சினிமாவில் ஒரே வருடத்தில் 18 படங்கள் நடித்து ஹிட் கொடுக்குமளவு பெரிய மார்க்கெட்டை கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். விஜயகாந்த் நடிக்கும் படங்களில் முக்கால்வாசி திரைப்படங்கள் வெற்றியை கொடுக்கக்கூடியவை.
அதே போல விஜயகாந்தும் கூட எப்போதும் மக்களுக்கு நல்லது செய்பவராகவே இருந்துள்ளார். திரைத்துறையில் அவர் நடிகர் சங்க தலைவராக இருந்தப்போது பலருக்கும் பல நன்மைகளை செய்துள்ளார். அவையெல்லாம் மிகவும் தாமதமாகதான் மக்களுக்கு தெரிய வந்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் வளர்ந்து வந்த பிறகே அந்த விஷயங்கள் மக்கள் மத்தியில் பரவ துவங்கின. அப்படி பயணடைந்தவர்களில் போண்டா மணியும் ஒருவர். சினிமா துறையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் போண்டாமணி.
இவரை அதிகமாக வடிவேலு காமெடிகளில் பார்க்க முடியும். போண்டா மணி ஒருமுறை அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அப்போது திருமணத்தை நடிகர் சங்கம் வைத்துள்ள மண்டபத்தில் நடத்தலாம் என நினைத்தார்.
கேப்டன் எடுத்த நடவடிக்கை:
இதற்காக நடிகர் சங்க மண்டபத்தை அணுகியபோது, அவர்கள் அந்த தேதியில் ஏற்கனவே வேறு ஒரு திருமணத்திற்காக அட்வான்ஸ் தொகை வாங்கிவிட்டதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் செய்தி விஜயகாந்திற்கு சென்றுள்ளது.
மண்டப நிர்வாகியை அழைத்த விஜயகாந்த், நடிகர் சங்கத்தில் உள்ளவர்களுக்காகதான் அந்த மண்டபம், அதனால் அவர்களுக்குதான் முதலில் மதிப்பு கொடுக்க வேண்டும். யார்கிட்ட அட்வான்ஸ் வாங்கினீர்களோ அவர்களிடம் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு போண்டா மணி திருமணத்தை மண்டபத்தில் நடத்துங்கள்” என கூறியுள்ளார். மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் இந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…