ரசிகர்களால் கேப்டன் எனச் செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த் இரண்டாவது இன்னிங்ஸ் அவர் திரை வாழ்வில் மறக்க முடியாத திருப்புமுனையாக அமைந்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சினிமாவில் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் சில நடிகர்கள் முன்னணியில் இருப்பர். அதில் சிலர் அடுத்த ஆண்டுகளிலும் தங்களது அடையாளத்தை நிலைநிறுத்துவர். சிலருக்கு கேரியர் அப்படியே முடிந்து விடும். சிலர் தட்டு தடுமாறி மீண்டும் பழைய நிலையை அடைவர். இதே பிரச்சனையை கேப்டன் விஜயகாந்தும் சந்தித்து இருக்கிறார்.
பல போராட்டத்திற்கு பிறகு சினிமாவிற்கு வந்த விஜயகாந்த், சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் வெற்றி நாயகனாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். இப்படத்தினை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இதைத்தொடர்ந்து, விஜயகாந்தால் சினிமாவில் கோல் உயர்த்த முடியவில்லை. சாதிக்கொரு நீதி, நீதி பிழைத்தது, பார்வையின் மறுபக்கம், சட்டம் சிரிக்கிறது, பட்டணத்து ராஜாக்கள் எனப் பல படங்கள் தோல்வியை தழுவியது. இது அவரின் மார்க்கெட்டையும் அசைத்தது. அவரின் மற்ற படங்களின் படப்பிடிப்புகள் கூட மந்தமாக சென்றது.
இதையும் படிங்க: “விஜயகாந்த்தான் சூப்பர் ஸ்டார்.. ஆனா ஜஸ்ட் மிஸ்”… ரஜினி வயிற்றில் புளியை கரைத்த சம்பவம்
இதேவேளையில், எஸ்.ஏ.சிக்கும் சில படங்கள் தோல்வியை தழுவியது. அப்போது அவருக்கு பி.எஸ்.வீரப்பா தயாரிப்பு நிறுவனத்தில் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது, பிஸியான கதாநாயகனாக இருந்த பிரபுவிடம் கதை சொல்லியிருக்கிறார். ஆனால், தோல்வி இயக்குனரான இவரை நம்பி பிரபு கால்ஷூட் கொடுக்க மறுத்துவிட்டார். அலைகள் ஒய்வதில்லை படத்தின் வெற்றி நாயகனாக இருந்த கார்த்திக்கை அணுகி இருக்கிறார். ஆனால் அவரின் கால்ஷூட்டும் இவருக்கு கிடைக்கவில்லை.
இவரிடம் எல்லாம் அழைவதற்கு நாம் உருவாக்கிய கதாநாயகனையே போடலாம் என முடிவெடுத்திருக்கிறார் எஸ்.ஏ.சி. விஜயகாந்தும் படத்தின் கதையை கூட கேட்காமல் ஓகே சொல்லிவிட்டாராம். அப்படம் தான் சாட்சி. ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வெளியான அப்படத்தினை ரசிகர்கள் ஏத்துக்கொண்டனர். 100 நாட்கள் ஓடிய அப்படம் வெற்றி படமாக அமைந்தது. மீண்டும் எஸ்.ஏ.சியால் வெற்றி நாயகன் அந்தஸ்த்தை பிடித்தார். தொடர்ந்து, இதே கூட்டணியில் உருவான வெற்றி படமும் 100 நாட்கள் ஓடியது. இதை தொடர்ந்து, அடுத்த 20 ஆண்டுகள் முன்னணி உச்ச நட்சத்திரமாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…