Connect with us
mgr

Cinema History

எம்.ஜி.ஆர் ரசிகராக கேப்டன் செய்த தரமான சம்பவம்!.. அவர் அப்பவே அப்படித்தான் போல!..

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஒரு தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகர் என்பது பலருக்கும் தெரியாது. ஏனெனில், அதை அவர் எங்கேயும் சொல்லி கொண்டதில்லை. ஒரே ஒரு பேட்டியில் மட்டும் ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தை பல முறை பார்த்ததாக சொல்லி இருக்கிறார். அதற்கு மேல் அவர் பேசியதில்லை.

ஆனால், மதுரையில் இருக்கும்போது எம்.ஜி.ஆரின் வெறித்தனமான ரசிகராக இருந்தவர்தான் விஜயகாந்த். எப்போது எம்.ஜி.ஆர் படம் வெளியானாலும் முதல் நாளே பார்த்துவிடுவார் விஜயகாந்த். நண்பர்கள் புடைசூழ தியேட்டருக்கு போய் அலப்பறை செய்து கொண்டே படம் பார்ப்பது அவரின் வழக்கம்.

இதையும் படிங்க: கேப்டன் டிவி ஆரம்பிச்சதும் விஜயகாந்த் போட்ட முதல் கண்டிஷன்! அட இந்தளவுக்கு நல்லவரா?

எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது கூட எம்.ஜி.ஆர் படங்கள் பார்த்துதான். அதேநேரம், சென்னை வந்து வாய்ப்பு தேடி சினிமாவில் வளர்ந்த பின்னரும் அவர் எம்.ஜி.ஆருடன் நெருங்கி பழகவில்லை.

ஆனால், எம்.ஜி.ஆர் பாணியை தேர்ந்தெடுத்தே விஜயகாந்தும் நடித்தார். எம்.ஜி.ஆர் போலவே ஆக்சன் கதைகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மெல்ல மெல்ல அரசியலிலும் நுழைந்து தனிக்காட்சி துவங்கி அரசியலிலும் ஒரு இடத்தை பிடித்தவர்தான் விஜயகாந்த். இது எல்லாமே எம்.ஜி.ஆரின் ரூட்தான்.

இன்னும் சொல்லப்போனால் அவரின் பல படங்களின் கதை கூட எம்.ஜி.ஆர் பட பாணியில்தான் அமைக்கப்பட்டது. மதுரையில் இருந்தபோது மதுரை மாவட்ட எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார் விஜயகாந்த். உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியானபோது இந்த படம் மதுரையில் ரிலீஸ் ஆனாலோ, வெற்றிப்படமாக அமைந்தாலோ புடவை கட்டிக்கொள்கிறேன் என அப்போதைய மதுரை மேயர் முத்து அறிவித்தார். அப்போது அவர் திமுகவில் இருந்தார்.

இதையும் படிங்க: கேப்டன் பேச்சை கேட்காத இயக்குனர்… கோபப்படாமல் விஜயகாந்த் சொன்னது இதுதான்!…

ஆனால், உலகம் சுற்றும் வாலிபன் படம் மதுரையில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது. எனவே, அதைகொண்டாடும் விதமாக மதுரை மாவட்டம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் சாரில் விஜயாகந்தும் அவரின் நண்பர்களும் ஒரு டஜன் புடவைகளை வாங்கி மேயர் முத்துவின் வீட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது மதுரையில் அது பரபரப்பாக பேசப்பட்டது.

எம்.ஜி.ஆரிடம் நெருங்கி பழகவில்லை என்றாலும் அவரின் மறைவுக்கு பின் ஜான்கி அம்மாவிடம் அன்புடன் பழகினார் விஜயகாந்த். அதன் காரணமாகவே எம்.ஜி.ஆர் பயன்படுத்தி பிரச்சார வேனை ஜானகி அம்மாள் விஜயகாந்துக்கு கொடுத்தார். கட்சி ஆரம்பித்த போதும், பிரச்சாரம் செய்தபோதும் அந்த வேனைத்தான் விஜயகாந்த் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top