ரஜினி வீட்டில் அமர்ந்து தர்ணா பண்ணிய விஜயகாந்த்... அட இப்படியெல்லாம் நடந்துச்சா!...
தமிழ் திரையுலகில் விஜயகாந்த் போல எதையும் துணிந்து செய்யும் நடிகரை யாரும் பார்க்க முடியாது. அவர் திரைவாழ்வில் எப்படியோ அப்படித்தான் நிஜத்திலும் இருந்தார். அல்லது நிஜ வாழ்வில் இருந்தது போலவேதான் சினிமாவிலும் நடித்தார்.
அவர் எம்.ஜி.ஆர், ரஜினியை பார்த்துதான் சினிமாவுக்கு வந்தார் என்பது பலருக்கும் தெரியாது. எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நுழைந்து உச்ச நட்சத்திரமாக மாறியவர் விஜயகாந்த். இவரின் பல திரைப்படங்கள் ரஜினி படங்களை விட அதிகமாக வசூல் செய்தது. இவரை பார்த்து ரஜினியே பயப்பட்டார் என்பதுதான் உண்மை.
நடிகராக மட்டுமில்லாமல் நடிகர் சங்க தலைவராகவும் கலக்கியவர் விஜயகாந்த். குறிப்பாக சிவாஜி காலத்தில் இருந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்துவந்த கடனை மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தி அடைத்தவர் விஜயகாந்த். அதேபோல், நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட பல முயற்சிகளை எடுத்தார். ஆனால், அதற்கு அவர் என்னவெல்லாம் செய்தார் என பலருக்கும் தெரியாது.
மலேசியாவில் கலை நிகழ்ச்சியை நடத்துவது என முடிவெடுத்ததும் இதில் கண்டிப்பாக எல்லா நடிகர், நடிகைகளும் குறிப்பாக ரஜினி மற்றும் கமல் இருவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என நினைத்தார் விஜயகாந்த். ஆனால், அவருக்கு ரஜினி வருவாரா என்கிற சந்தேகம் இருந்துள்ளது. எனவே, நடிகர் சங்கத்தை சேர்ந்த சில நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்கு சென்றுள்ளார் விஜயகாந்த்.
வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டின் தரையில் அப்படியே கீழே அமர்ந்துவிட்டாராம் விஜயகாந்த். இதைப்பார்த்து பதட்டமான ரஜினி ‘விஜி விஜி என்னது இது.. எழுந்திருங்க’ எனக்கூற, தரையில் அமர்ந்தவாறே ‘அண்ணே ரஜினிண்ணே. இது நம்ம சங்கம்..நம்ம கட்டிடம்.. நீங்க கண்டிப்பா மலேசியாவுக்கு வரணும்’ என தர்ணா பண்ண துவங்கிவிட்டராம்.
நான் கண்டிப்பாக வருகிறேன என ரஜினி சொல்லியும் விஜயகாந்த் கேட்கவில்லையாம். அதன்பின் ‘விஜி.. எனக்கு என்ன ஷூட்டிங் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு நான் கண்டிப்பாக மலேசியாவில் நடக்கும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்’ என ரஜினி கூறிய பின்னரே முகத்தில் சந்தோஷத்துடன் எழுந்தாராம் விஜயகாந்த். இந்த தகவலை அப்போது அவருடன் இருந்த சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காதலை ஏற்க மறுத்த நவரச நாயகன்… தற்கொலை செய்யப்போன அந்த பிரபல நடிகை… இப்படி எல்லாம் நடந்திருக்கா??