Categories: Cinema News latest news

கமலும் இல்லை… சிவாஜியும் இல்லை.. பல வருடமாக இழுத்துக்கொண்டு வரும் குற்றப்பரம்பரை… ஹீரோவாக நடிக்கும் வாரிசு நடிகர்…

பல வருடமாக தள்ளிக்கொண்டே வரும் குற்றப்பரம்பரை நாவலை தற்போது இயக்குனர் சசிகுமார் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

kutra parambarai

சினிமா வட்டத்தினரிடம் நாவலை படமாக்கும் முயற்சிகள் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதிலும் பொன்னியின் செல்வனை போல குற்றப்பரம்பரை நாவலை பல வருடமாக இயக்குனர்கள் சிலர் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதிலும், பாரதிராஜா மற்றும் பாலாவிற்கு இடையே நடந்த் சண்டை கோலிவுட் அறிந்த சேதி தான்.

எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி எழுத்தில் உருவான குற்ற பரம்பரையை படமாக்கி அதில் கமலை நடிக்க வைக்க பாலா விரும்பினார். ஆனால் அவருக்கு கால்ஷூட் பிரச்சனை ஏற்பட படத்தில் நடிக்க இயலாமல் போனது. அவருக்கு பதில் வேறு நடிகர்களை பாலா தேர்வு செய்தார். அதைப்போல, இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் குற்ற பரம்பரை நாவலை படமாக்க எண்ணினார்.

sasikumar

இதில், சிவாஜியை நடிக்க வைக்க பாரதிராஜா நினைத்தாராம். இதுவே இவர்களுக்கு இடையில் சண்டையை உருவாக்கியது. பின்னர் பாரதிராஜவை வைத்து பாலா இப்படத்தினை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இருந்தும் இருவராலும் படத்தினை எடுக்க முடியவில்லை. இந்நிலையில், குற்ற பரம்பரை நாவலை தற்போது வெப் சீரிஸாக இயக்க சசிகுமார் திட்டமிட்டு இருக்கிறார். அதில் நாயகனாக விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Published by
Akhilan