விஜயகாந்த் மகன் திருமணம் நின்னு போனதுக்கு காரணம் இதுதான்!.. பயில்வான் ரங்கநாதன் சொல்லும் பகீர் தகவல்...

by சிவா |   ( Updated:2024-01-05 06:21:15  )
vijaya prabakaran
X

Vijayakanth: கடந்த சில நாட்களாவே மறைந்த நடிகர் விஜயகாந்த் தொடர்பான பல செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது. விஜயகாந்தின் மரணம் பலவேறு வகையிலும் பலரையும் பாதித்திருக்கிறது. எனவே, அவருடன் தொடர்புடைய பலரும் அவரை பற்றி பல விஷயங்களை பேசி வருகின்றனர்.

விஜயகாந்துக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் பெயர் விஜயபிரபகாரன். விஜகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு செயல்பட முடியாத நிலையில் இருந்தபோது விஜய பிரபகாரன் அப்பாவின் கட்சியில் வேலை செய்ய துவங்கினார். விஜயகாந்துக்கு பதில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தேமுதிக தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், கொஞ்சம் பேசவும் கற்றுக்கொண்டு தொண்டர்களின் கைத்தட்டலை வாங்கினார்.

இதையும் படிங்க: பழைய குப்பைகளை கிளறும் விஜய், ரஜினி ரசிகர்கள்.. ஜகபதி பாபு சொன்ன கீர்த்தி சுரேஷ் மேட்டர் வைரல்!..

தேமுதிகவுக்காக இவர் பிரச்சாரம் செய்தார். தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட பல அரசியல் மேடைகளிலும் பேசி வந்தார். விஜயகாந்த் இவருக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார். 2019ம் வருடம் அதற்கான சில முயற்சிகளும் நடந்தது. ஆனால், அதன்பின் அதுபற்றி செய்திகள் வரவில்லை.

vijaya prabakaran

தற்போது விஜயகாந்த் மறைந்துவிட்ட நிலையில் விஜயபிரபாகரன் திருமணம் பற்றி பலரும் பலவிதமான செய்திகளை சொல்லி வருகிறார்கள். அந்த திருமணம் பாதியிலேயே நின்றுபோய்விட்டது. மீண்டும் நடக்காது என்றும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: ‘பெரியண்ணா’ படத்தில் சூர்யாவுக்கு பதில் கேப்டன் சிபாரிசு செய்த நடிகர் யார் தெரியுமா? அட இவரா?

ஆனால், இந்த தகவலை நடிகரும், பல வருடமாக சினிமாவில் பத்திரிக்கையாளராக இருக்கும் பயில்வான் ரங்கநாதன் மறுத்துள்ளார். கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ என்பவரின் மகள் கீர்த்தனாவுக்கும், விஜய பிரபாகரனுக்கும் 2019ம் வருடம் நிச்சயதார்த்தம் நடந்தது. பிரதமர் மோடியின் தலைமையில் இந்த திருமணத்தை நடத்த விஜயகாந்த் ஆசைப்பட்டார். ஆனால், மோடியின் தேதி கிடைக்கவில்லை.

vijaya prabakaran

எனவே, திருமண நாள் தள்ளிக்கொண்டே போனது. அதற்கிடையில் விஜயகாந்துக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. எனவே, அப்பாவுக்கு உடல்நிலை சரியானதும் திருமணம் செய்துகொள்வோம் என விஜயபிரபாகரனும் நினைத்தார். இப்படியே 4 வருடங்கள் ஓடிவிட்டது. கண்டிப்பாக அவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என அவர் கூறினார்.

இதையும் படிங்க: 6 மாசமா அவஸ்த்தைப் படுறான்.. ஒண்ணும் வர மாட்டேங்குது.. இசையமைப்பாளர்களை கலாய்த்த இளையராஜா!

Next Story