தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்த விஜயகாந்த் பாடல்.. அடேங்கப்பா!!
1992 ஆம் ஆண்டு விஜயகாந்த், பானுபிரியா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆனந்தராஜ், நெப்போலியன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “பரதன்”. இத்திரைப்படத்தை சபாபதி தக்சினாமூர்த்தி இயக்கியிருந்தார். இளையாராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
“பரதன்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. குறிப்பாக இதில் இடம்பெற்ற “புன்னகையில் மின்சாரம்” என்ற பாடல் இப்போதும் மிகப் பிரபலமான பாடலாக திகழ்கிறது.
விஜயகாந்த் அதற்கு முன்பு நடித்த பல திரைப்படங்களில் எந்த பாடலிலும் நடனத்திற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்திருக்கமாட்டார். ஆனால் “பரதன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “புன்னகையில் மின்சாரம்” பாடலில் அதுவரை யாரும் பார்க்காத ஒரு நடனத்தை ஆடியிருந்தார் விஜயகாந்த். மிகவும் ஸ்டைலாகவும், பெப்பியாகவும் அந்த பாடலில் அவரது நடனம் இருந்தது.
விஜயகாந்த் இப்படி எல்லாம் நடனமாடுவாரா? என்று ஆச்சர்யப்படும்படி அந்த நடனம் அமைந்தது. அந்த பாடலில் நடன இயக்குனராக பணியாற்றியவர் பிரபு தேவா. அதுவரை பார்த்திராத விஜயகாந்த்தின் ஸ்டைலான நடனத்தை அந்த பாடலில் கொண்டு வந்திருந்தார் பிரபு தேவா.
இந்த நிலையில் பிரபல காமெடி நடிகரான ரோபோ ஷங்கர், விஜயகாந்த்தின் 70 ஆவது பிறந்த நாள் விழாவில் “புன்னகையில் மின்சாரம்” பாடலை குறித்த ஒரு அரிய தகவலை பகிர்ந்துகொண்டார்.
இதையும் படிங்க: பாக்யராஜ் செஞ்சது என்னமோ நல்ல காரியம்தான்… ஆனா சிவாஜிக்குத்தான் சட்டுன்னு கோபம் வந்திருச்சு!! அப்படி என்ன நடந்துச்சு??
“பரதன் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த புன்னகையில் மின்சாரம் பாடலில் கிட்டத்தட்ட 182 Cut-கள் இருக்கும். அந்த பாடலை இளையராஜா பாடியிருந்தார். பிரபு தேவாதான் நடன இயக்குனர். விஜயகாந்த் மிகவும் அழகாக நடனமாடியிருப்பார். தமிழ் சினிமாவில் இது வரை 182 Cut-கள் கொண்ட பாடல் இது வரை வெளிவந்ததே இல்லை” என அந்த விழாவில் இந்த அரிய தகவலை பகிர்ந்துகொண்டார் ரோபோ ஷங்கர்.