More
Categories: Cinema News latest news

நாயகன் படப்பிடிப்பில் கமல் போட்ட தயிர்சாதம்… 3 லட்சத்தை அசால்ட்டாக விட்டுத்தந்த விஜயகாந்த்… ஏன் தெரியுமா??

தமிழ் சினிமாவின் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த்தின் பெருந்தன்மையையும் உதவும் மனப்பான்மையையும் குறித்து சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இந்த நிலையில் தான் நடித்த திரைப்படத்திற்காக தனது சம்பளத்தில் இருந்து மூன்று லட்சத்தை அசால்ட்டாக விட்டுத்தந்திருக்கிறார் விஜயகாந்த். விஜயகாந்த் எதற்காக 3 லட்சத்தை விட்டுக்கொடுத்தார்? என்ன காரணம்? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

Vijayakanth

“சொல்வதெல்லாம் உண்மை”, “பூந்தோட்ட காவல்காரன்”, “பாட்டுக்கொரு தலைவன்” போன்ற விஜயகாந்த் திரைப்படங்களை தயாரித்தவர் டி.சிவா. சமீபத்தில் கூட “பார்ட்டி” சார்லி சாப்ளின் 2”, “அக்னி சிறகுகள்” போன்ற திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

Advertising
Advertising

சென்ற வருடம் நடைபெற்ற விஜயகாந்த்தின் 70 ஆவது பிறந்தநாள் விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா பசியபோது ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவாரஸ்ய தகவலை குறித்து பகிர்ந்துள்ளார்.

T.Siva

அதாவது தனது படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தினமும் அசைவ விருந்து வைப்பது கேப்டனின் வழக்கமாம். அவ்வாறு ஒரு திரைப்படத்தின்போது டெக்னீசியன்கள் அனைவருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என சிந்தித்தபோது, தயாரிப்பாளர் டி.சிவா, விஜயகாந்த்திடம் “சார், இந்த படத்துக்கு ரொம்ப சின்ன பட்ஜெட்தான். என்னால எப்படி தினமும் டெக்னீசியன்களுக்கு அசைவ விருந்து வைக்கமுடியும்?” என தனது நிலையை கூறியிருக்கிறார்.

உடனே தனது சம்பளத்தில் இருந்து 3 லட்சத்தை பிடித்துக்கொண்டு, அந்த காசில் விருந்தளிக்கச் சொல்லிவிட்டாராம். அதுவும் விஜயகாந்த் படப்பிடிப்பில் அசைவ சாப்பாடு அன்லிமிட்டடாக கிடைக்குமாம்.

Nayakan

ஏவிஎம் ஸ்டூடியோவில் கமல்ஹாசனின் “நாயகன்” படப்பிடிப்பும், விஜயகாந்த்தின் “உழவன் மகன்” படப்பிடிப்பும் வெவ்வேறு தளங்களில் ஒரே நேரத்தில் நடந்ததாம்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவை கிண்டல் செய்து கண்ணதாசன் எழுதிய பாடல்… ஓஹோ இப்படியெல்லாம் நடந்துருக்கா??

Uzhavan Magan

அப்போது “நாயகன்” படப்பிடிப்பில் தயிர் சாதம், தக்காளி சாதம் பொட்டலம் போட்டுக்கொண்டு இருந்தார்களாம். அந்த நேரத்தில் “உழவன் மகன்” படப்பிடிப்பில் இலை போட்டு விருந்து நடந்துகொண்டிருந்ததாம். இவ்வாறு அந்த விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா கூறியிருந்தார். மற்றவரின் பசியை போக்குவதில் ஆனந்தம் கண்டிருக்கிறார் விஜயகாந்த் என்றுதான் கூறவேண்டும்!!

Published by
Arun Prasad

Recent Posts