Connect with us

“யாருமே சாப்பிடல..” ஓடும் ரயிலை நிப்பாட்டிய விஜயகாந்த்.. என்ன மனிஷன்யா!!

Cinema News

“யாருமே சாப்பிடல..” ஓடும் ரயிலை நிப்பாட்டிய விஜயகாந்த்.. என்ன மனிஷன்யா!!

விஜயகாந்திடம் யார் வந்து உதவி என்று கேட்டாலும் அதனை உடனே செய்யக்கூடியவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். குறிப்பாக ஒருவர் சாப்பிடவில்லை என்று சொன்னால் போதும் அவரை சாப்பிட வைத்து தான் அனுப்புவார். சாப்பாட்டு விஷயத்தில் எந்த பாகுபாடும் இல்லாமல் நடந்துகொள்பவர் விஜயகாந்த்.

அவர் நடிக்கும் படப்பிடிப்பில் அவருக்கு என்ன சாப்பாடு வழங்கப்படுகிறதோ அதையே தான் எல்லாத்துக்கும் வழங்குவார். சாப்பாடு போதுமானதாக இல்லை என்று கூறினாலும் உடனே சாப்பாட்டுக்கு தயார் செய்ய ஆணையிடுவார். இது போன்று பல சம்பவங்களை நாம் கேள்விபட்டிருப்போம்.

ஆனால் பெரும்பாலும் யாரும் அறியாத ஒரு நம்பமுடியாத சம்பவத்தை விஜயகாந்த் நிகழ்த்தியுள்ளார். அதாவது விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் கடனை மீட்க பல நடிகர்களோடு பல ஊர்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அப்போது ஒரு நாள் மதுரையில் கலை நிகழ்ச்சியை முடித்து அனைவரும் ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது ரயிலில் அவருடன் வந்த கலைஞர்கள் யாரும் சாப்பிடவில்லை என விஜயகாந்திற்கு தெரியவந்தது. உடனே ஓடும் ரயிலை செயினை பிடித்து இழுத்துள்ளார் விஜயகாந்த். ரயில் நின்றவுடன் கீழே இறங்கிய விஜயகாந்த் அங்கிருந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை நடந்து சென்றிருக்கிறார். தூரத்தில் ஒரு ஹோட்டல் கடையை கண்டுபிடித்திருக்கிறார். அந்த ஹோட்டல் கடையில் உள்ள அனைத்து உணவு வகைகளையும் பாத்திரங்களோடு வாங்கி வந்து கலைஞர்கள் அனைவரையும் சாப்பிடச்சொல்லியிருக்கிறார். இச்சம்பவத்தில் இருந்த அனைவரும் இதனை பார்த்து திகைத்துவிட்டார்களாம்.

சக கலைஞர்கள் சாப்பிடாமல் இருப்பதை பார்த்த விஜயகாந்த் துடித்துப்போய் ரயிலையே நிப்பாட்டியுள்ள சம்பவம், அவர் உண்மையிலேயே ஒரு “கேப்டன்” தான் என்பதை வெளிகாட்டியுள்ளது.

 

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top