More
Categories: Cinema History Cinema News latest news

இரவு 2 மணிக்கு நடுரோட்டில் பாய்ந்து ஓடிய கேப்டன்..என்ன நடந்தது தெரியுமா..?

விஜயகாந்த் இவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் விஜயராஜ். இவர் சிறுவயதிலிருந்தே படிப்பின் மீது ஆர்வம் இன்றி இருந்தார். ஆதலால் அவரது தந்தையின் அரிசி ஆலைக்கு சென்று சிறு சிறு வேலைகளை செய்து வந்தார். பின்னர் சினிமாவின் மீது மோகம் கொண்டு சென்னை வந்தார். சினிமாவிற்காக தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். 1980ல் ”தூரத்து இடி முழக்கம்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்லதொரு நடிகராக அடையாளம் காணப்பட்டார்.

vijayakanth

பின்னர் 1981 இல் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ”சட்டம் ஒரு இருட்டறை ”படத்தின் மூலமாக தன்னை ஒரு அதிரடி நாயகனாக அடையாளப்படுத்தி கொண்டார். எம்ஜிஆருக்கு ஒரு ”ப.நீலகண்டன் ”மற்றும் ரஜினிக்கு ஒரு ”எஸ்.பி முத்துராமன்” என்பது போல விஜயகாந்திற்க்கு ”எஸ்.ஏ சந்திரசேகர்” என்று சொல்லலாம். இருவரும் இனைந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்கள். இவர்களது கூட்டணியில் சுமார் 19 படங்கள் வெளியானது. கடைசியாக இருவரும் 1999 ஆம் ஆண்டு ”பெரியண்ணா” என்ற படத்திற்காக இணைந்து பணியாற்றினார்கள்.

Advertising
Advertising

vijayakanth

இப்படத்தில் சிவக்குமார் தனது நெருங்கிய நண்பர் என்பதால் அவருடைய மகன் சூர்யா சினிமா சினிமாவில் வெற்றி பெற விஜயகாந்த் படத்தில் நடித்து உதவியதாக எஸ்.ஏ.சி குறிப்பிட்டுள்ளார். இப்படி ரஜினி,கமல் இருக்கும்போதே அவர்களுக்கு இணையான வெற்றி படங்களை கொடுத்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை திரட்டி தனக்கு ஒரு அடையாளத்தை நிலைநாட்டியவர் விஜயகாந்த். அப்படி திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் அவர் வீர தீர செயலில் ஈடுபடக் கூடியவர். அப்படி ”ஒரு நாள் இரவு தனது படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இரவு 2 மணி அளவில் காரில் சென்னை டி. நகர் அருகில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தார்”.

vijayakanth with sac

”அப்பொழுது ஒரு மர்ம நபர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு ஒருவரை தாக்க துரத்திக் கொண்டு சென்றிருந்தார். அப்பொழுது அவரைக் கண்ட விஜயகாந்த் காரை விட்டு இறங்கி அந்த மர்ம நபரை துரத்தி பிடித்து அடித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அவரைக் கொண்டு சென்று புகார் கொடுத்திருக்கிறார். இத்தனைக்கும் அந்த நபர் கையில் கத்தி இருந்துள்ளது. ஆனாலும், விஜயகாந்த் பயப்படாமல் அவரை மடக்கி பிடித்துள்ளார். இப்படி அவர் திரை வாழ்க்கையில் மட்டுமன்றி நிஜ வாழ்க்கையிலும் ஒரு உண்மையான அதிரடி நாயகனாகத்தான் விஜயகாந்த் இருந்துள்ளார்”. இந்த தகவலை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒருபேட்டியில் கூறியுள்ளார்.

Published by
Sathish G