ரமணா ஷூட்டிங்கில் விஜயகாந்துக்கு எதிராக ஏ.ஆர். முருகதாஸ் பார்த்த வேலை!.. மனுஷன் பொங்கிட்டாராம்!..

by Saranya M |   ( Updated:2024-02-29 10:35:11  )
ரமணா ஷூட்டிங்கில் விஜயகாந்துக்கு எதிராக ஏ.ஆர். முருகதாஸ் பார்த்த வேலை!.. மனுஷன் பொங்கிட்டாராம்!..
X

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் ஓடவே இல்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் கமல்ஹாசனே கேமியோ ரோல் தான் என ரஜினி ரசிகர்கள் முதல் பாதி முழுவதும் அவர் இல்லாமல் ஓடிய படத்தை பார்த்து ட்ரோல் செய்தனர். ஆனால், விக்ரம் படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.

இதெல்லாம் சமீபத்தில் நடந்த கூத்து. ஆனால், ரமணா படத்திலேயே இப்படியொரு விஷயத்தை ஏ.ஆர். முருகதாஸ் பார்த்து விஜயகாந்தின் கோபத்திற்கே ஆளான கதை ஒன்று இருக்கிறது தெரியுமா?..

இதையும் படிங்க: வ்ரூம்.. வ்ரூம்!.. நானும் அஜித் போல ஒரு வேர்ல்ட் டூர் போயிட்டு வரேன்!.. பைக் எடுத்த ரஜினிகாந்த்!..

காவாலா பாட்டு ஷூட்டிங் 5 நாட்கள் நடந்தது. கடைசியாக அரை நாள் மட்டுமே என்னை நெல்சன் அழைத்து 2 ஸ்டெப் போட சொல்லிட்டு அனுப்பி விட்டார். தமன்னாவிடம் பேசக் கூட விடலன்னு புலம்பியிருந்தார்.

ரமணா படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 96 நாட்கள் நடைபெற்ற நிலையில், விஜயகாந்தை வைத்து வெறும் 45 நாட்கள் மட்டுமே ஏ.ஆர். முருகதாஸ் ஷூட்டிங் செய்தாராம். அதிலும், காலை 8 மணிக்கு படப்பிடிப்பு என்றால் மதியம் 1 மணியுடன் ஷூட்டிங் ஓவர் என விஜயகாந்தை அவர் அனுப்பி விடுவாராம்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் இடத்தை ராஷ்மிகா மந்தனா பிடிச்சிடுவாரு போல!.. இனிமே அவர் நேஷ்னல் கிரஷ் இல்லை!..

அதே போல நைட் ஷூட்டிங்கின் போது 7 மணிக்கு ஆரம்பித்தால் 10 மணிக்கெல்லாம் சார் உங்க சீன் அவ்ளோ தான் கிளம்புங்க என்றே ஏ.ஆர். முருகதாஸ் விஜயகாந்தை பேக்கப் செய்ய ஒரு நாள் கடுப்பாகி என்ன தான் என்ன வச்சு பண்ற என கொந்தளித்து கேட்டே விட்டாராம் கேப்டன் விஜயகாந்த்.

ஆனால், ஒட்டுமொத்த படத்தையும் பார்த்த பின்னர், ஹீரோ எல்லா சீன்லையும் வரணும்னு அவசியம் இல்லை. ஹீரோவை ஒளித்து வைத்தும் படத்தை ஹிட் கொடுக்கலாம் என்பதை புரிந்துக் கொண்டு ஏ.ஆர். முருகதாஸை விஜயகாந்த் பாராட்டியிருக்கிறார்.

Next Story