18 முறை விஜயகாந்துடன் மோதிய பாக்கியராஜ் படங்கள்... ஜெயிச்சது யாரு? வாங்க பார்க்கலாம்!..
80களில் தான் விஜயகாந்தும், பாக்கியராஜூம் ரஜினி, கமலுக்கு இணையாக இருந்தனர். இவர்களது படங்கள் மோதிக்கொண்டால் எப்படி இருக்கும்? அதிக முறை ஜெயிச்சது யாருன்னு பார்ப்போம்.
1979ல் விஜயகாந்துக்கு அகல்விளக்கு, பாக்கியராஜிக்கு சுவர் இல்லாத சித்திரங்கள் ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர். 1981ல் விஜயகாந்துக்கு சட்டம் ஒரு இருட்டறை, பாக்கியராஜிக்கு மௌன கீதங்கள் ரிலீஸ். இதுல இருவருமே வின்னர்.
1982ல் பாக்கியராஜிக்கு தூறல் நின்னு போச்சு, விஜயகாந்துக்கு ஆட்டோ ராஜா ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர். 1983ல் பாக்கியராஜிக்கு முந்தானை முடிச்சு, விஜயகாந்துக்கு டௌரி கல்யாணம் ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர். வெள்ளி விழா, விருதுகள் என குவித்தது இந்தப் படம்.
1984ல் விஜயகாந்துக்கு நாளை உனது நாள், பாக்கியராஜ், சிவாஜி நடித்த தாவணிக்கனவுகள் ரிலீஸ். இதுல இருவரும் வின்னர். 1985ல் விஜயகாந்துக்கு ராமன் ஸ்ரீ ராமன், பாக்கியராஜ், ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன் ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர்.
1985ல் பாக்கியராஜிக்கு சின்ன வீடு, விஜயகாந்துக்கு ஏமாற்றாதே, ஏமாறாதே ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர். 1987ல் பாக்கியராஜிக்கு எங்க சின்ன ராசா, விஜயகாந்துக்கு வீரன் வேலுத்தம்பி ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர். 1988ல் பாக்கியராஜிக்கு இது நம்ம ஆளு, விஜயகாந்துக்கு நல்லவன் ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர். 1990ல் விஜயகாந்துக்கு சத்ரியன், பாக்கியராஜிக்கு அவசர போலீஸ் 100 ரிலீஸ். இதுல இருவரும் வின்னர்.
1991ல் விஜயகாந்துக்கு கேப்டன் பிரபாகரன், பாக்கியராஜிக்கு பவுணு பவுணு தான் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் பாக்கியராஜிக்கு ருத்ரா, விஜயகாந்துக்கு மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர்.
இதையும் படிங்க... விஜய்க்கு அவர் நோ சொல்லி இருக்கவே மாட்டார்… அதான் இதை செய்தோம்.. சீக்ரெட் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!…
1992ல் விஜயகாந்துக்கு சின்னக்கவுண்டர், பாக்கியராஜிக்கு சுந்தர காண்டம் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் பாக்கியராஜிக்கு ராசுக்குட்டி, விஜயகாந்துக்கு காவியத்தலைவன் ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர்.
1994ல் விஜயகாந்துக்கு சேதுபதி ஐபிஎஸ், பாக்கியராஜிக்கு வீட்ல விசேஷங்க ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். 1995ல் விஜயகாந்துக்கு கருப்பு நிலா, பாக்கியராஜிக்கு ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ரிலீஸ். இதுல இருவருமே வின்னர். 1996ல் விஜயகாந்துக்கு அலெக்சாண்டர், பாக்கியராஜிக்கு ஞானப்பழம் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். 1989ல் விஜயகாந்துக்கு பாட்டுக்கு ஒரு தலைவன், பாக்கியராஜிக்கு என் ரத்தத்தின் ரத்தமே ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.