Connect with us
Vkanth Sathyaraj

Cinema History

விஜயகாந்த் உடன் 57 முறை நேரடியாக மோதிய சத்யராஜ் படங்கள்… ஜெயித்தது யாரு புரட்சி கலைஞரா… புரட்சித்தமிழனா?

புரட்சிக்கலைஞர் விஜயகாந்துடன் புரட்சித்தமிழன் சத்யராஜின் படங்கள் 57 முறை மோதியுள்ளன. இதுவரை விஜயகாந்துடன் அதிகமாக மோதியது சத்யராஜின் படங்களாகத் தான் இருக்கிறது. நீளம் கருதி முழுப்பட்டியலையும் வெளியிட முடியாது என்பதால் ஒரு சில படங்களின் பட்டியலை மட்டும் பார்ப்போம். இருவரில் ஜெயித்தது யார்னு பார்க்கலாமா…

கரிமேடு கருவாயன் – கடைக்கண் பார்வை 

1986 பொங்கல் அன்று விஜயகாந்துக்கு கரிமேடு கருவாயன் படமும் சத்யராஜிக்கு கடைக்கண் பார்வை படமும் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். 1986 பிப்ரவரியில் விஜயகாந்துக்கு மனக்கணக்கு படமும், சத்யராஜிக்கு ரசிகன் ஒரு ரசிகை படமும் ரிலீஸ். இதுல சத்யராஜ் தான் வின்னர்.

1986 ஜூலையில் சத்யராஜிக்கு கடலோர கவிதைகள், தர்மம் படங்கள் ரிலீஸ். விஜயகாந்துக்கு எனக்கு நானே நீதிபதி ரிலீஸ். இதுல கடலோரக் கவிதைகள் தான் மிகப்பெரிய வெற்றி. 1986 ஆகஸ்டில் விஜயகாந்துக்கு ஊமைவிழிகள் படமும், சத்யராஜிக்கு இரவுப்பூக்கள் படமும் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.

பாலைவன ரோஜாக்கள் – தர்ம தேவதை

1986 தீபாவளிக்கு சத்யராஜிக்கு பாலைவன ரோஜாக்கள், விடிஞ்சா கல்யாணம் படமும், விஜயகாந்துக்கு தர்ம தேவதை, தழுவாத கைகள் படமும் ரிலீஸ். இவற்றில் இருவருக்குமே வெற்றி தான். 1986 டிசம்பரில் விஜயகாந்துக்கு ஒரு இனிய உதயம் படமும், சத்யராஜிக்கு மந்திரப் புன்னகை படமும் ரிலீஸ். இதுல சத்யராஜ் தான் வின்னர்.

சிறைப்பறவை – பூவிழி வாசலிலே

SP-PV

SP-PV

1987 பொங்கல் அன்று விஜயகாந்துக்கு சிறைப்பறவை படமும், சத்யராஜிக்கு பூவிழி வாசலிலே படமும் ரிலீஸ். இதுல சத்யராஜ் தான் வின்னர். 1987 பிப்ரவரியில் விஜயகாந்துக்கு பூ மழை பொழியுது படமும், சத்யராஜிக்கு சின்னதம்பி பெரிய தம்பி, விலங்கு என இரு படங்களும் ரிலீஸ். இதுல சத்யராஜ் தான் வின்னர். சின்னதம்பி பெரிய தம்பி பிளாக் பஸ்டர் ஹிட்.

வேலுண்டு வினையில்லை – முத்துக்கள் மூன்று

1987 மார்ச்சில் விஜயகாந்துக்கு வேலுண்டு வினையில்லை படமும், சத்யராஜிக்கு முத்துக்கள் மூன்று படமும் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். 1987 தமிழ்புத்தாண்டுக்கு விஜயகாந்துக்கு வீரபாண்டியன் படமும், சத்யராஜிக்கு ஆளப்பிறந்தவன், மக்கள் என் பக்கம் படமும் ரிலீஸ். இதுல சத்யராஜ் தான் வின்னர்.

1987 ஜூனில் விஜயகாந்துக்கு கூலிக்காரன், வீரன் வேலுத்தம்பி என இருபடங்கள் ரலீஸ். சத்யராஜிக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடு ரிலீஸ். இதுல விஜயகாந்தின் கூலிக்காரன் வெற்றி. ஆனால் சத்யராஜின் படம் வெள்ளிவிழா. அதனால் அவர் தான் வின்னர்.

நினைவே ஒரு சங்கீதம் – ஜல்லிக்கட்டு

1987 ஜூலையில் விஜயகாந்துக்கு நினைவே ஒரு சங்கீதம் படமும், சத்யராஜிக்கு ஜல்லிக்கட்டு படமும் ரிலீஸ். ரெண்டு படமும் ஹிட். ஆனால் அதிக நாள்கள் ஓடியது விஜயகாந்த் படம். அதனால் அவர் தான் வின்னர். 1987 டிசம்பரில் விஜயகாந்துக்கு காலையும் நீயே மாலையும் நீயே படம் ரிலீஸ். சத்யராஜிக்கு வேதம் புதிது ரிலீஸ். சத்யராஜ் தான் வின்னர்.

 தெற்கத்திக் கள்ளன் – என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

1988 தமிழ்புத்தாண்டுக்கு விஜயகாந்துக்கு உள்ளத்தில் நல்ல உள்ளம், தெற்கத்திக் கள்ளன் என இருபடங்கள் ரிலீஸ். சத்யராஜிக்கு என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படமும் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். ஏன்னா தெற்கத்திக் கள்ளன் பிளாக்பஸ்டர் ஹிட்.

1988 மே மாதம் விஜயகாந்துக்கு பூந்தோட்ட காவல்காரன் படமும், சத்யராஜிக்கு கனம் கோர்ட்டார் அவர்களே படமும் ரிலீஸ். இதுல விஜயகாந்த் படம் வெள்ளிவிழா. அதனால் அவர் தான் வின்னர்.

தம்பி தங்க கம்பி – ஜீவா 

TTK-Jeeva

TTK-Jeeva

1988 ஜூலையில் விஜயகாந்துக்கு தம்பி தங்க கம்பி படமும், சத்யராஜிக்கு ஜீவா படமும் ரிலீஸ். இதுல சத்யராஜ் தான் வின்னர். 1988 நவம்பரில் விஜயகாந்துக்கு உழைத்து வாழ வேண்டும் படமும், சத்யராஜிக்கு புதிய வானம் படமும் ரிலீஸ். இதுல இருவருமே வெற்றி.

1989 பிப்ரவரியில் விஜயகாந்துக்கு எம் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் படமும், சத்யராஜிக்கு தாய்நாடு படமும் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். 1989 ஜூலையில் விஜயகாந்துக்கு பொறுத்தது போதும் படமும், சத்யராஜிக்கு சின்னப்பதாஸ் படமும் ரிலீஸ். இதுல இருவருக்கும் வெற்றி.

வாத்தியார் வீட்டுப்பிள்ளை – ராஜநடை

1989 ஆகஸ்டில் விஜயகாந்துக்கு பொன்மனச்செல்வன் படமும், சத்யராஜிக்கு அன்னக்கிளி சொன்ன கதை படமும் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். 1989 தீபாவளிக்கு சத்யராஜிக்கு வாத்தியார் வீட்டுப்பிள்ளை, திராவிடன் படங்கள் ரிலீஸ். விஜயகாந்துக்கு ராஜநடை, தர்மம் வெல்லும் படங்கள் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.

1990 பொங்கலுக்கு விஜயகாந்துக்கு புலன் விசாரணை படமும், சத்யராஜிக்கு வாழ்க்கைச் சக்கரம் படமும் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். இது தவிர சத்யராஜ் படங்கள் 33 முறை விஜயகாந்த் படங்களுடன் மோதியுள்ளன.

 

 

 

 

 

google news
Continue Reading

More in Cinema History

To Top