Connect with us
viyakanth

Cinema History

தொடர் தோல்வி!.. கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு ஹிட் கொடுத்தே ஆகணும்!.. சொல்லி அடித்த விஜயகாந்த்…

மதுரையிலிருந்து சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தவர் விஜயகாந்த். விஜயராஜ் என்கிற நிஜப்பெயரை சினிமாவுக்காக விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். அதற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் ரஜினிகாந்த் என சொல்ல தேவையில்லை. ரஜினியை பார்த்துதான் விஜயகாந்த் சினிமாவுக்கு வந்தார் என்பது பலருக்கும் தெரியாது.

வாய்ப்புக்காக போராடி, பல சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கி, பல அவமானங்களை சந்தித்து ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார். எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் நடித்த சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் விஜயகாந்தை ஒரு ஹீரோ மெட்டீரியலாக மாற்றியது. அப்படத்தின் வெற்றி விஜயகாந்துக்கு பல வாய்ப்புகளை பெற்று தந்தது.

இதையும் படிங்க: விஜயகாந்த் செய்த உதவியை மறந்தாச்சா? நன்றி கெட்டவரா விஜய்?

தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் ஆகியோருக்கே போட்டி நடிகராக விஜயகாந்த் உருவெடுத்தார். சில சமயம் ரஜினி, கமல் படங்களோடு விஜயகாந்தின் படம் வெளியாகி அவர்களின் படங்களை விட அதிகமாக வசூல் செய்ததும்தான் சினிமா வரலாறு. எம்.ஜி.ஆரை போலவே, ரஜினியை போலவே ஆக்‌ஷன் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இவர்.

1985க்கு பின் விஜயகாந்த் தொடர் தோல்வி படங்களை கொடுத்தார். அதுவும் வரிசையாக 11 படங்கள் தோல்வி அடைந்தது. அப்போது விஜயகாந்தின் திரைப்பட வேலைகளை அவரின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர்தான் பார்த்து வந்தார். அப்போது விஜயகாந்துக்கு திருமணம் செய்யவும் திட்டமிட்டனர். ஆனால், தொடர் தோல்விகளை கொடுத்துவிட்டு திருமணம் செய்யக்கூடாது என்பதில் விஜயகாந்த் உறுதியாக இருந்தார்.

இதையும் படிங்க: விஜயகாந்தின் டூயட் ஆசைக்கு ஆப்புவைத்த நடன இயக்குனர்.. நடிகையோட இருந்த லவ்வுதான் காரணமாம்!…

திருமணத்திற்கு கண்டிப்பாக ஒரு ஹிட் படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்பதில் ராவுத்தரும் உறுதியாக இருந்தார். அப்படி உருவான திரைப்படம்தான் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்தின் 100வது படமாகவும் அப்படம் அமைந்தது. ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த், மன்சூர் அலிகான், சரத்குமார், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

மன்சூர் அலிகான் இந்த படத்தில்தான் வில்லனாக அறிமுகமானார். கேப்டன் பிரபகாரன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது. அந்த மகிழ்ச்சியோடுதான் விஜயகாந்த் பிரேமலதாவை 1990 ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த படத்திற்கு பின்னர்தான் எல்லோரும் விஜயகாந்தை கேப்டன் என அழைக்க துவங்கியது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top