யார் சொல்லியும் கேட்கல!.. மகனுக்கு விஜயகாந்த் வைக்க ஆசைப்பட்ட பெயர்!.. நடந்தது இதுதான்!..
பொதுவாக நடிகர்கள் தான் நடிக்கும் படங்களில் வீர வசனம் பேசுவார்கள். ரவுடிகளை புரட்டி எடுப்பார்கள். மக்களுக்கு அறிவுரை சொல்வார்கள். சாதி, மதம் முக்கியமில்லை என வசனம் பேசுவார்கள். எல்லாம் கேமரா முன்பு மட்டுமே. ஷூட்டிங் முடிந்துவிட்டால் அது எல்லாமே அவர்களுக்கு மறந்துபோய்விடும்.
அதாவது திரையில் வருவதற்கும் அவர்களின் நிஜவாழ்விற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. திரையில் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என வசனம் பேசினார்களோ அப்படியெல்லாம் அவர்கள் நிஜ வாழ்வில் இருப்பார்கள். ஆனால், இதற்கு விஜயகாந்த் விதிவிலக்கு. சினிமாவில் அவர் எப்படியோ அப்படித்தான் நிஜ வாழ்விலும். அல்லது நிஜ வாழ்வில் எப்படி இருந்தாரோ அப்படித்தான் சினிமாவிலும் நடிப்பார்.
இதையும் படிங்க: ஃபிலிமே இல்லாம ஷூட்டிங்! வடிவேல் காமெடி மாதிரில்ல இருக்கு!. கமலுக்கே விபூதி அடிக்க பார்த்த பாரதிராஜா!
படப்பிடிப்பு தளங்களில் ரசிகர்கள் யாராவது நக்கலடித்தாலோ, நடிகைகளிடம் சில்மிஷம் செய்தாலோ புரட்டி எடுத்து விடுவார். ஒத்த ஆளாக களம் இறங்கி கூட்டத்தையே ஒடவிடுவார். அதனால்தான் விஜயகாந்த் அண்ணன் இருந்தால் படப்பிடிப்பில் பாதுகாப்பாக இருக்கலாம் என பல நடிகைகள் சொல்லி இருக்கிறார்கள்.
விஜயகாந்த் எப்போதும் யாரிடமும் சாதி, மதம் பார்த்து பழகியது இல்லை. ஏழை, பணக்காரன் ஏற்றத்தாழ்வு எப்போதும் அவரிடம் கிடையாது. எல்லோருடனும் ஒரேமாதிரி பழகுவார். அதனால்தான் அவரைப்பற்றி திரையுலகில் பலரும் எப்போதும் பெருமையாக பேசுகிறார்கள். தனது படங்களில் பணிபுரிபவர்களுக்கு ஒரே மாதிரி சாப்பாடு போட்டவர்.
இதையும் படிங்க: நான் மத்தவங்க மாதிரி இல்ல!.. விஜயகாந்துடன் விரும்பி நடித்த ஒரே நடிகை!.. அட அவரா?!..
விஜயகாந்துக்கு பல வருடங்களாக நெருக்கமான நண்பராக இருந்தவர் இப்ராஹிம் ராவுத்தார். விஜயகாந்தின் எல்லா விஷயங்களையும் கவனித்துக்கொண்டவர் இவர். விஜயகாந்தை மக்கள் விரும்பும் நடிகராக மாற்றியதற்கு பின்னால் உழைத்தவர், யோசித்தவர் எல்லாம் இவர்தான். இது விஜயகாந்துடன் பழகிய பலருக்கும் தெரியும்.
விஜயகாந்துக்கு முதல் மகன் பிறந்தபோது என் மகனுக்கு நான் சௌகத் அலி என பெயர் வைப்பேன். இல்லையெனில் ஒரு கிறிஸ்துவ பெயரை வைப்பேன். எனக்கு மதம் மீதும் நம்பிக்கை இல்லை’ என்று சொன்னவர் விஜயகாந்த். அதற்கான முயற்சிகளும் எடுத்தார். ஆனால் ‘எதிர்காலத்தில் உங்கள் மகன் வெளிநாடுகளுக்கு போகும்போது அவரின் பெயரே அவருக்கு பிரச்சனையாக வரலாம். சந்தேகப்பட்டு விசாரிப்பார்கள்’ என சில அதிகாரிகளும், விஜயகாந்துக்கு நெருக்கமானவர்களும் சொன்னபோது அந்த எண்ணத்தை கைவிட்டு ‘சண்முக பாண்டியன்’ என பெயர் வைத்திருக்கிறார். இந்த தகவலை சண்முக பாண்டியனவே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: கருப்பா இருந்தா ரஜினிக்கு தம்பியா?.. அவமானத்தை தாண்டி வளர்ந்த கேப்டன் விஜயகாந்த்…