More
Categories: Cinema News latest news

5 நாள் முழுக்க மரத்தின் மேலே நின்ற விஜயகாந்த்.. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணன் சொன்ன பகீர் தகவல்..

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணன் இயக்கத்தில், விஜயகாந்த், சரத் பாபு, ராதா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கஜேந்திரா. இந்த படம் கடந்த 2004ம் ஆண்டு வெளியானது. இந்த படம் குறித்து பல விஷயங்களை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜயகாந்த்துடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்று எனக்கு நீண்ட நாட்களாக ஆசை இருந்தது. ஆனால், அதற்கான சூழ்நிலை அமையவே இல்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை வைத்து படம் இயக்கிவிட்டேன். ஆனால் விஜயகாந்தை வைத்து இயக்க சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க- கோபத்தில் விஜயகாந்த் என்னை எட்டி உதைச்சாரு!.. நாங்க போடாத சண்டையா?- கூலா சொன்ன மன்சூர் அலிகான்…

எனக்கு அவரின் நடிப்பும், படங்களும் மிகவும் பிடிக்கும். அவரிடம் பலமுறை இது குறித்து கூறியிருக்கிறேன். அப்போது தான் கஜேந்திரா படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அவருடன் பணியாற்றியது ஒரு மிக சிறந்த அனுபவம். அவரால் ஒரு சின்ன பிரச்சனை கூட ஏற்படாது.

வேறு யாருக்காவது ஏதாவது பிரச்சனை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பார். அவரை போன்ற ஒரு நபரை பார்க்கவே முடியாது. அந்த படத்தில் வரும் ஒரு சண்டை காட்சியில், காட்டுப்பகுதியில் மரத்தின் மீது நின்றுகொண்டு, பறந்து பறந்து அடிக்கும் படி இருக்கும்.

ஒரு முறை மரத்தில் இருந்து கீழே இறங்கினால், மீண்டும் எல்லாவற்றையும் செட் பண்ண வேண்டும் என்பதற்காக, காலையில் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு, மரத்தில் ஏறினால், இரவு தான் இறங்குவார்.

இதே போல தான் 5 நாட்களும் நடந்தது. டூப் கூட போடவில்லை. முகத்தில் ஒரு சின்ன சலிப்பு கூட இல்லாமல் நடித்து கொடுத்தார். ஸ்டண்ட் மாஸ்டரே வியந்து பாராட்டினார் என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க- மகனுக்காக தானே களத்தில் இறங்கிய விஜயகாந்த்!.. வருடங்கள் கழித்து ரசிகர்களை சந்திக்கும் அந்த நாள்

Published by
prabhanjani

Recent Posts