‘பொன்மேனி உருகுதே’ பாடலுக்கு போட்டியா கேப்டனை வச்சா? கடைசில நடந்ததே வேற..

viji
கமல் மற்றும் சில்க் ஸ்மிதா ஆகியோரது நடிப்பில் உருவான பாடல்தான் பொன்மேனி உருகுதே என்ற பாடல். 1982 ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை என்ற படத்தில் அமைந்த அந்தப் பாடல் எந்த அளவுக்கு பிரபலமானது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கமலும் சில்க்கும் அந்தப் பாடலில் காட்டிய நெருக்கம் இன்றளவும் யாராலும் மறக்க முடியாது.
மேலும் சில்க்கில் கெரியரிலும் அந்தப் பாடல் ஒரு திருப்பு முனையாக அமைந்த பாடலாகும். அதே மாதிரியான ஒரு பாடலை விஜயகாந்தை வைத்து எடுக்க வேண்டும் என ஒரு இயக்குனர் விரும்பினாராம். விஜயகாந்த் மற்றும் நளினியை வைத்து அலையோசை என்ற படத்தை இயக்கியவர்தான் ஸ்ரீமுகை ரவி.

viji1
அந்தப் படப்பிடிப்பு சமயத்தில் தான் மூன்றாம் பிறை படம் ரிலீஸ் ஆகி சக்கப் போடு போட்டிருந்ததாம். அதுவும் குறிப்பாக பொன்மேனி உருகுதே பாடலை தேடி அனைவரும் ஓடிக் கொண்டிருந்தார்களாம். இதை கவனித்துக் கொண்டிருந்த அலையோசை பட இயக்குனர் ஸ்ரீமுகை ரவி நம்ம படத்திலேயும் அப்படி ஒரு பாடலை வைக்க வேண்டும் என எண்ணினாராம்.
ஆனால் அடிப்படையில் நளினியும் விஜயகாந்தும் ஒரு அண்ணன் தங்கையாகவே பழகி வந்தார்களாம். எப்பொழுதும் விஜயகாந்தை நளினி அண்ணன் என்றே தான் அழைப்பாராம். ஒரு டூயட் பாடல் படமாக்கும் போது இடையிடையே நளினி கேப்டனை அண்ணன் அண்ணன் சொல்லும் போது இயக்குனர் கடுப்பாகி விட்டாராம்.

viji2
உடனே அந்த இயக்குனர் ‘ஒரு சரணத்திற்கு மேல உங்களை வச்சு டூயட்டே எடுக்க முடியாது’ என்று சொன்னாராம். மேலும் விஜயகாந்தும் நளினியிடம் ‘படப்பிடிப்பு முடியும் வரைக்காவது அண்ணன் என்று கூப்பிடாமல் இரேன்’ என்று சொல்லுவாராம். இந்த சுவாரஸ்ய தகவலை நடிகை நளினி ஒரு பேட்டியில் கூறினார்.