நடிகர் விஜயகாந்த் நடித்த படங்கள் பெரும்பாலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதில்லை. அவரே இயக்கிய ஒரு படம் உண்டு. அது தான் விருதகிரி. இந்தப் படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை உமா பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் உடனான பேட்டி ஒன்றில் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
விஜயகாந்தோட டைரக்ஷன்ல விருதகிரி படத்துல நடிச்சேன். அந்தப் படத்துல என் பொண்ணு கடத்தப்படுற மாதிரி ஒரு சீன். அதுக்கு ‘நீங்க எப்படி அழப் போறீங்க? ரொம்ப உடைஞ்சி அழப்போறீங்களா? அல்லது அப்படியே மன இறுக்கத்தோட பண்ணப் போறீங்களான்னு கேட்டுட்டு இதை நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. உங்களுக்கு எப்படி வேணுமோ அப்படி பண்ணலாம்.
அவங்களுக்கு ஒரு 5 நிமிடம் கொடுங்க’ன்னு சொல்லிட்டு போயிட்டார். இது எவ்வளவு ஒரு அழகான விஷயம். அந்த மாதிரி தான் எல்லாத்துக்குமே ஆர்டிஸ்டோட வசதியைப் பார்த்துப் பார்த்து செய்வாரு. எப்பவாவது கால்ஷீட் பிரச்சனை வந்ததுன்னா கூட ‘அப்படியாம்மா அங்கே போகணுமா அம்மா நான் பார்த்துக்கறேன்’னு சொல்வாரு.
செட்ல இருக்குற எல்லாரையும் நல்ல வசதிகளோடு வச்சிக்குவாரு. கேமராமேன் கிட்டயும் ‘ஒன்மோர்’ கேட்டா அவரு ‘அது கடைசில தானே வந்தது… நான் கட் பண்ணிக்கறேன்’னு சொல்வாராம். அப்புறம் ‘இல்ல சார்… ஒன்மோர் தானே கேட்கறேன்’னு கேமரா மேன் சொல்வாராம். ரொம்ப ஒரு நல்ல மனிதர் அவர்.
ஆர்டிஸ்டை மதிச்சி வந்து அவங்களை நடிக்க அழைச்சிட்டு வரும்போது அவங்களோட விருப்பத்தையும் கேட்குறது எவ்வளவு பெரிய விஷயம். இந்தக் கேரக்டரைப் பத்தி உங்களுக்குப் புரிஞ்சிடுச்சு. அதை நீங்க எப்படிப் பண்ணப்போறீங்கன்னு சுதந்திரத்தைக் கொடுத்ததே அவரோட பெரிய மனசுதான்.
இதையும் படிங்க… வில்லன் சத்யராஜிக்கு கமல் கொடுத்த சூப்பர் டிப்ஸ்… ஃபாலோ பண்ணிய விஜய் சேதுபதி
அதனால நமக்கும் ஒரு தன்னம்பிக்கை வருது. சாதாரணமா டேட் பிரச்சனைன்னா ஆயிரம் தடைக்கற்கள் வரும். அதுவும் டைரக்டர்கிட்ட நேரடியா பேச முடியாது. ஆனா அந்த விஷயத்தைக் கூட இவருக்கிட்ட ப்ரீயா பேச முடிஞ்சது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போடா போடி…
Viduthalai 2:…
விடுதலை 2…
Actor karthi:…
அமரன் திரைப்படம்…