ரஜினிக்கு மரியாதை கொடுத்த விஜயகாந்த்... அதுக்காக இப்படி எல்லாமா செஞ்சாரு கேப்டன்?

தமிழ்த்திரை உலகுக்கு கடந்த ஆண்டு ஈடு செய்ய முடியாத இழப்பு விஜயகாந்த் இறந்தது தான். அவரை கருப்பு எம்ஜிஆர் என்றே திரையுலகம் கொண்டாடியது. அவரைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவு தயாள குணம் படைத்தவர்.

இதையும் படிங்க... உண்மையான ரசிகன்-னா இவர்தான்! எம்ஜிஆருக்காக சத்யராஜ் செய்த செயல்! இதுவரை யாருக்கும் தெரியாத ஒன்னு

வந்தவருக்கு முதலாவதாக விருந்து உபசரித்ததும் தான் நடக்க வேண்டிய வேலைகளையே பார்ப்பாராம். அதே போல தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவரக முதல்ல வருபவர்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு அதன்பிறகு தான் அவருக்கு தேவையானவற்றைக் கொடுத்தும் அனுப்புவாராம்.

'இப்படி ஒரு மனிதரா' என அவரை திரையுலகமே வியந்து பார்த்தது. படம் சூட்டிங் என்றால் யூனிட்டில் உள்ள ஒட்டுமொத்த ஆள்களுக்கும் பாகுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான சாப்பாடு கொடுக்கச் செய்தவர் இவர் தான்.

கமல், ரஜினி கோலோச்சிய காலகட்டத்தில் அடுத்த இடத்தில் இருந்து இவர்களுக்கே டஃப் கொடுத்தவர் தான் விஜயகாந்த். ஆரம்பத்தில் இவரை அவமதித்தவர்களை எல்லாம் தன் தனித்திறனால் வியந்து பார்க்க வைத்தவர் தான் கேப்டன். மக்கள் மத்தயில் எம்ஜிஆருக்குப் பிறகு நல்ல பெயர் எடுத்தார் என்றால் அது விஜயகாந்த் தான்.

நடிகர் ராதாரவி முதல் முறையாக விஜயகாந்த் பற்றி யாரும் கேள்விப்படாத தகவல் ஒன்றை இப்படி தெரிவித்துள்ளார்.

2018ல தான் விஜயகாந்தைப் பார்த்தேன். அப்போ டப்பிங் ஒண்ணும் இல்லை. எலெக்ஷன்ல நின்னேன். அதுக்குப் பிறகு விஜயகாந்தை நான் பார்க்க முடியல. அவரு எவ்ளோ பெரிய ஆளு. நல்ல உள்ளம் படைத்தவர். ரொம்ப திறமைசாலி. அவரு எவ்ளோ பெரிய நடிகன்.

அந்தக் காலகட்டத்துல தொடர்ந்து ஹீரோவா நடித்தார்.ரஜினி சார் வந்தாருன்னா அவரு சிகரெட்டை ஆப் பண்ணிடுவாரு. அப்போ 'நீங்க பிடிங்க'ன்னு சொல்வாரு. ஆனா விஜயகாந்த் 'இருக்கட்டும்னே'ன்னு சொல்லி, சிகரெட்டை வாங்கிக்கிட்டு இந்தப் பக்கம் வந்துடுவாரு. அவரு முன்னாடி பிடிக்க மாட்டாரு.

இதையும் படிங்க... பிரபுவுக்கு அவ்ளோ பெரிய மனசா…? அதனால தான் எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்காரா..?

நான் அதைப் பார்த்து வியந்துருக்கேன். ஆனா கேட்டது இல்லை. யாருக்கு மரியாதை தரணுமோ அது மனதில் உதிச்சுதுன்னா நேரில் காமிச்சிருவாரு.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story