இந்திய திரையுலகில் முடி சூடா மன்னனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். பெங்களூரில் பேருந்து நடத்துனாரக இருந்து சினிமா ஆசையில் அந்த வேலையை விட்டுவிட்டு சென்னை வந்து வாய்ப்பு தேடியவர். பாலச்சந்தர் இயக்கினர் அரங்கேற்றவேளை படத்தில் ஒரு சிறிய வேடம். அதன்பின் சின்ன சின்ன வேடங்கள்.கமலின் படங்களில் வில்லன், 2வது ஹீரோ என நடித்து பின் பைரைவி படத்தின் மூதல் ஹீரோவாக மாறினார்.
அதன்பின் படிப்படியாக வளர்ந்து தனக்கெனெ ஒரு மார்க்கெட்டை உருவாக்கியதோடு மட்டுமில்லாமல் சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். கடந்த 47 வருடங்களாக அவர் திரைவானில் வலம் வருகிறார்.
சினிமா உலகில் அவரை சேவையை பாராட்டி அவருக்கு தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இன்று அந்த விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. எனவே, அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் டிவிட்டர் பக்கத்தில் ‘இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அண்ணன் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, விஜயகாந்துக்கு நன்றி கூறிய ரஜினி ரசிகர்கள் ‘தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றிகள் கேப்டன். நீங்கள் என்றும் நல்ல உடல்நலத்துடன் இருக்க இறைவனை பிராத்திக்கின்றேன்’ என பதிவிட்டு வருகின்றனர்.
NEEK Movie:…
Nayanthara dhanush:…
நடிகர் அஜித்தின்…
நடிகர் அஜித்தின்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின்…