சச்சின் ரீ ரிலீஸை விட சம்பவம் பண்ண விஜயகாந்த் படம் வருது!.. தியேட்டர்கள் தெறிக்கப்போவது உறுதி!..

by Saranya M |
vijayakanth
X

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் சில பெரிய படங்கள் மீண்டும் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்த காத்திருக்கின்றன. குட் பேட் அக்லி வெளியாகி கடந்த 4 நாட்களாக தியேட்டர்கள் அனைத்தையும் திருவிழாவாக மாற்றியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு அஜித் படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களில் அலைமோதி படத்தை பெரும் வெற்றிப் படமாக மாற்றியது.

இந்த ஆண்டு அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் இதில், பாதி கூட வசூலையோ ரசிகர்களின் அன்பையோ பெறவில்லை. அஜித் குமார் இனிமேல் இப்படி கமர்ஷியல் மாஸ் மசாலா படங்களை பண்ணாலே போதும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் போன்ற கதையின் மீது அக்கறை செலுத்தாமல் ரசிகர்களின் பல்ஸ் அறிந்து பில்டப் படங்களை கொடுத்தாலே அஜித் படங்கள் கல்லா கட்டி விடும் என்கின்றனர்.

இந்த மாதம் விஜய் நடித்த சச்சின் படம் ரீ ரிலீஸ் ஆகிறது. வரும் ஏப்ரல் 18ம் தேதி சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்ய கலைப்புலி தாணு முடிவெடுத்துள்ளார். வாடிவாசல் படத்தை ஆரம்பிக்க பல வருடங்களாக அவர் காத்திருந்தும் இதுவரை எந்த பலனும் இல்லாமல் ஆரம்ப கட்ட பணிகளிலேயே அந்த படம் உள்ளது.

சச்சின் ரீ ரிலீஸ் ஆனாலும், கில்லி ரீ ரிலீஸ் அளவுக்கு கல்லா கட்டுமா என்பது சந்தேகம் தான். படம் வெளியான போதே பெரிதாக ஓடவில்லை. ஆனால், விஜயகாந்த் நடிப்பில் கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்னதாக வந்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் விரைவில் 4கே தரத்தில் வெளியாகப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு ரீ ரிலீஸில் அந்த படம் அதிக வசூலை அள்ளும் என சினிமா வட்டாரத்தில் பேசத் தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு கோட் படத்தில் ஏஐ மூலமாக விஜயகாந்தை கொண்டு வந்த நிலையில், அந்த படம் தியேட்டரில் தெறித்தது. அதே போல விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படமும் திரையரங்குகளை திருவிழாவாக மாற்றும் என்கின்றனர்.

Next Story