Vijayakanth: புரட்சி கலைஞன் எனச் செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்தின் படங்களை பார்க்கும் போது கண்டிப்பாக ஒரு ஆக்ஷனை நேரில் பார்த்த பீல் கிடைக்கும். அப்படி தத்ரூபமாக நடித்து இருப்பார். இவரின் திரை வாழ்க்கையில் அதிகமாக இரட்டை வேட படத்திலும் நடித்து இருக்கிறாராம். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
நான் பச்சை தமிழன் என்ற உணர்வில் அவர் தமிழில் மட்டுமே நடித்தார். அவர் படங்கள் மற்ற மொழிகளில் டப் செய்ய மட்டும் தான் பட்டது. விஜயகாந்த் கேரியரில் அதிகமாக போலீஸ் வேடம் போட்டு இருக்கிறார். கிட்டத்தட்ட 20 படங்களில் காவல்துறையாக அதிகாரியாக நடித்திருக்கிறார்.
இதையும் வாசிங்க:எம்ஜிஆர் மீது எந்தளவு பற்று கொண்டவர் கேப்டன்! அதற்கு ஒரு உதாரணமான சம்பவம் இதோ
அதுப்போல இவரின் கேரியரில் இரட்டை வேட படங்களும் அதிகம். அதன் மொத்த கணக்கை பார்க்கும் முன்னர், படத்தின் லிஸ்ட்டை பார்த்து விடலாமே. முதலில், ராமன் ஸ்ரீராமன் படத்தில் முதலில் இரட்டை வேடம் ஏற்றார். இதில் வில்லனாக சத்யராஜ் நடித்திருப்பார். கமர்ஷியல் படமாக வெளியான இது நல்ல வரவேற்பை பெற்றது.
விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் ராவுத்தரின் தயாரிப்பில் உருவான திரைப்படம் உழவன் மகள். இப்படத்தில் விஜயகாந்துடன் ராதிகா, ராதா, எம்.என்.நம்பியார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இயக்குனர் சுந்தராஜன் இயக்கத்தில் காலையும் நீயே மாலையும் நீயே திரைப்படம்.
இதையும் வாசிங்க: அந்த சீனில் நடிக்க மறுத்த எம்ஜிஆர்…. சமாதான படுத்தி நடிக்க வைத்த எம்ஜிஆர்… எந்த படம்னு தெரியுமா?….
வானத்தைப் போல அண்ணன், தம்பியாக இரட்டை வேடம், கண்ணுப்பட போகுதய்யாவில் அப்பா, மகன் ஆகிய இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும், கள்ளழகர், பொறுத்தது போதும், ராஜதுரை, காந்தி பிறந்த மண், வீரம் வெளஞ்ச மண்ணு, தவசி, பேரரசு, மரியாதை ஆகிய 16 படங்களில் இரட்டை வேடம் ஏற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாடு படம்…
போடா போடி…
Viduthalai 2:…
விடுதலை 2…
Actor karthi:…