திருப்பதிக்கு படையெடுக்கும் பிரபலங்கள்.. விஜயகுமார் குடும்பத்தோடு ஏழுமலையானை தரிசிக்க இதுதான் காரணமா?

சமீபத்தில் நடிகை சமந்தா மற்றும் கயாடு லோஹர் திருப்பதி சென்றிருந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியிருந்த நிலையில் தற்போது மூத்த நடிகரான விஜயகுமார் தன் குடுப்பத்துடன் திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயகுமார் 1961ம் ஆண்டு வெளியான ஸ்ரீ வள்ளி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அவள் ஒரு தொடர்கதை, வருவான் வடிவேலன், நேர்மை, புதியவானம், இதயம், குஷி, பாபா, சாமி, ஏய், லண்டன், லிங்கா, ஒஸ்தி, சிங்கம் போன்று 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், 2015ம் ஆண்டு வரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராக பணியாற்றினார். அதை தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினராக இருந்த அவர் பின்பு பாஜகவில் இணைந்தார்.
நடிகர் விஜயகுமார் முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு கவிதா, அனிதா என இரு மகள்களும் அருண் விஜய் என்ற ஒரு மகனும் உண்டு. கவிதா மற்றும் அனிதா இருவரும் டாக்டராகவும் அருண் விஜய் நடிகராகவும் பணியாற்றி வருகின்றனர்.

மேலும், விஜயகுமார் நடிகை மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு வனிதா, பிரீத்தி மற்றும் ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உண்டு. மூன்று மகள்களும் திரைத்துரையில் பணியாற்றியுள்ளனர். கடந்த ஆண்டு இவரது மூத்த பேத்தியின் திருமணம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது விஜயகுமார் தனது குடும்பத்துடன் திருப்பதி சென்றுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் மகள் தாத்தா கையெடுத்து கும்பிட்டத்தை பார்த்து அவரும் அதை செய்தது கியூட்டாக இருந்தது. அங்கு பேட்டியளித்திருந்த விஜயகுமார் பெருமாள் அழைக்காமல் அவரை பார்க்க வரமுடியாது அவர் அழைச்சிட்டார் வந்து அவரது தரிசனம் பெற்றது மிக்க மகிழ்ச்சி அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என பேசியுள்ளார்.
மேலும், நடிகை ஸ்ரீதேவி பெருமாளை தரிசித்ததில் ரொம்ப சந்தோஷம், இயக்குநர் வெங்கடேஷ் நிமலபுடி இயக்கத்தில் உருவாகியுள்ள சுந்தரகாண்டா படத்தில் தான் பல ஆண்டுகள் கழித்து நடித்துள்ளதாகவும் வரும் மே மாதம் 13ம் தேதி ரீலிஸாகவிருக்கிறது என தெரிவித்திருந்தார்.