ஒரு அம்மாவா இருந்துகிட்டு இதெல்லாம் தேவையா? தன்னை விமர்சித்த நெட்டிசனுக்கு தகுந்த பதிலடி கொடுத்த நடிகை...!
திரைபிரபலங்கள் என்ன செய்தாலும் அதை விமர்சனம் செய்வதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஒரு நடிகரோ அல்லது நடிகையோ ஏதேனும் ஒன்றை செய்தால் போதும் அவர்களை பாராட்டுகிறார்களோ இல்லையோ குறை கூறுவதற்கு மட்டும் வந்து விடுகிறார்கள்.
அந்த வகையில் சென்னை 28 படம் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை விஜயலட்சுமியை நெட்டிசன் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். அதாவது நடிகை விஜயலட்சுமி எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி ஏதேனும் புகைப்படம் அல்லது வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் நடனமாடும் வீடியோ ஒன்றை விஜயலட்சுமி அவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதை கண்ட ஒருவர், "ஒரு குழந்தைக்கு அம்மாவா இருக்க உனக்கு இந்த ஆட்டம் தேவையா?" என விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்த விஜயலட்சுமி, "அம்மா ஆகிட்டா மூலைல உட்கார்ந்து அழனுமா? ஐயோ, அவ்வளவுதான் என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு இனிமே எல்லாருக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன். நான் ஒரு தியாகினு. அதை நீ பண்ணு உனக்கு சிலை வைப்பாங்க, தியாக செம்மல்னு.
எனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கு. குழந்தை பெற்ற பல அம்மாக்களுக்கு வாழ்க்கை இருக்கு. அவர்கள் விரும்பியதை அவர்கள் செய்வார்கள். அவர்கள் விரும்பிய ஆடைகளை அணிவார்கள். உன்ன மாதிரி ஆளுங்களால தான் நிறைய பொண்ணுங்க டிப்ரஷன்ல இருக்காங்க. உன் அட்வைஸ் கூந்தலை நீங்களே பின்னி பூ வைத்து கொள்ளவும்" என்று கூறியுள்ளார்.