Cinema History
ஒரு கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை!.. அப்பவே மாஸ் காட்டிய விஜயசாந்தி!…
Vijayashanthi: ஆந்திராவை சேர்ந்தவர் விஜயசாந்தி. ஆனால், இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு பல தயாரிப்பு நிறுவனங்களில் தனது புகைப்படங்களை கொடுத்திருந்தார். ஒருமுறை, இயக்குனர் பாரதிராஜா வந்த கார் பஞ்சர் ஆகிவிட அருகில் இருந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு போனார்.
அப்போது அங்கே இருந்த புகைப்படங்களை பார்த்த போது விஜயசாந்தியின் புகைப்படம் அவரின் கண்ணில் பட்டது. எனவே, தான் நடித்த கல்லுக்குள் ஈரம் என்கிற படத்தில் அவரை நடிக்க வைத்தார். அதன்பின் சில தமிழ் படங்களில் நடித்து விட்டு ஆந்திரா பக்கம் போய் தெலுங்கு படங்களில் நடித்தார் விஜயசாந்தி.
இதையும் படிங்க: நான்தான் சூப்பர்ஸ்டார்!. ரஜினி படத்தில் சீன் போட்ட விஜயசாந்தி!.. அடக்கிய இயக்குனர்!…
சின்ன பெண்ணாக இருந்தது முதல் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். 1990ம் வருடம் இவரின் நடிப்பில் தெலுங்கில் உருவான திரைப்படம்தான் கார்தவ்யம். இந்த படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம்தான் தமிழில் வைஜெயந்தி ஐபிஎஸ் என்கிற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
இந்த படம் தமிழ்நாட்டிலும் நல்ல வசூலை பெற்றது. எனவே தொடர்ந்து பல படங்களிலும் போலீஸ் அதிகாரியாக நடித்தார். இந்திய சினிமாவில் முதன் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகை விஜயசாந்திதான். பாலையா என அழைக்கப்படும் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி, வெங்கடேஷ் போன்ற பலருக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.
தமிழில் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த மன்னன் படத்தில் நடித்திருந்தார். அது இல்லாமல் சில நேரிடையான தமிழ் படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் வயது ஆகிவிட்டதால் தெலுங்கில் அம்மா வேடத்தில் நடிக்க துவங்கினார். ஒருபக்கம், ஆந்திர அரசியலிலும் கலக்கி வருகிறார்.
சமீபத்தில் ஒரு தமிழ் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த விஜயசாந்தி பல அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். மேலும், தன்னுடைய வெற்றிக்கு தனது கணவர் உறுதுணையாக இருந்ததாக கூறியிருக்கிறார். இப்போது நயன்தாராவை லேடி சூப்பர்டார் என ரசிகர்கள் சொல்கிறார்கள். ஆனால், 90களிலேயே லேடி சூப்பர்ஸ்டாராக இருந்தவர் விஜயசாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கவுண்டமணி கூட நடிக்கிறது ரொம்ப கஷ்டம்!.. இப்படி சொல்லிட்டாரே விஜயசாந்தி!…