ரஜினி, அமிதாப் இவர்களுக்கு இணையான அந்த அந்தஸ்தை பெற்ற நடிகை..அட நம்ம லேடி சூப்பர் ஸ்டாரா?

by Rohini |   ( Updated:2024-11-14 22:37:17  )
ரஜினி, அமிதாப் இவர்களுக்கு இணையான அந்த அந்தஸ்தை பெற்ற நடிகை..அட நம்ம லேடி சூப்பர் ஸ்டாரா?
X

#image_title

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக எந்த அளவு ரஜினியை கொண்டாடி வருகிறோமோ அதைப்போல ஹிந்தியிலும் சூப்பர் ஸ்டார் ஆக இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்பவர் நடிகர் அமிதாப் பச்சன்.

இந்திய அளவில் போற்றப்படும் நடிகர்களில் ரஜினியும் அமிதாப்பச்சனும் முக்கியமானவர்கள். இருவரும் சேர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்கள் .கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வேட்டையன் திரைப்படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் வேட்டையன் திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பும் இருந்தது. அந்தப் படத்தில் அமிதாப்பச்சனின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. ரஜினியை விட அமிதாப்பச்சன் வயதில் மூத்தவர் எனினும் இருவருக்குமான நட்பு ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை மாறாமல் அப்படியேதான் இருக்கின்றது.

ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி தங்களது நட்பை மேலும் மேலும் வளர்த்துக் கொள்கின்றனர். இந்த நிலையில் 90கள் காலகட்டத்தில் அதிக சம்பளம் பெறும் மூன்று நடிகர்களில் ரஜினியும் அமிதாப்பச்சனம் முக்கியமானவர்கள். இவர்களுடன் இணைந்து ஒரு நடிகை அதிக சம்பளம் பெறும் பட்டியலில் இடம் பெற்றார்.

அவர் வேறு யாருமில்லை. நடிகை விஜயசாந்தி. 90களில் அதிக சம்பளம் பெறும் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்த பிரபலங்களின் வரிசையில் விஜயசாந்தியும் இணைந்திருந்தார். முதலிடத்தில் அமிதாப்பச்சன். இரண்டாம் இடத்தில் ரஜினி. மூன்றாவது இடத்தில் விஜய சாந்தி.

இந்த ஒரு செய்தி அந்த காலத்தில் பல நாளிதழ்களில் வெளிவந்து பிரபலமாகின. மேலும் கோடியில் சம்பளம் வாங்கிய முதல் நடிகை என்ற பெருமைக்கும் சொந்தக்காரராக மாறினார் விஜயசாந்தி. அந்த நேரங்களில் பல படங்களில் பிசியாக நடித்து வந்தார் விஜயசாந்தி. தமிழ் தெலுங்கு என பிற மொழிகளிலும் நடித்து ஒரு லேடி சூப்பர் ஸ்டார் ஆக அன்றே போற்றப்பட்டார் .

vijaya

vijaya

ஒரு ஹீரோவுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் சிறந்து நடிப்பதில் வல்லமை படைத்த நடிகையாகவும் திகழ்ந்தார். இவருடைய படங்கள் எனும் போது அவருடைய சண்டைக்காட்சி தான் நமக்கு ஞாபகம் வரும். அந்த அளவுக்கு ஸ்டண்ட் காட்சிகளில் பிச்சி உதறுவார் .

Next Story