கவுண்டமணி கூட நடிக்கிறது ரொம்ப கஷ்டம்!.. இப்படி சொல்லிட்டாரே விஜயசாந்தி!...

#image_title
Vijayasanthi: தமிழ் சினிமாவில் நடிகர்கள் மட்டுமே ஆக்சன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த 90 கால கட்டத்தில் அதிரடி ஆக்ஷன் கதாநாயகியாக களம் இறங்கி பல படங்களிலும் கலக்கியவர் விஜயசாந்தி. அதேநேரம், அவை எல்லாமே நேரடி தமிழ் படங்கள் இல்லை. தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இதற்கு பிள்ளையார் சுழி போட்டது விஜயசாந்தி ஐபிஎஸ் படம்தான். உயர் போலீஸ் அதிகாரியாக விஜயசாந்தி நடித்து வெளியான அந்த படம் தமிழ்நாட்டிலும் வசூலில் சக்கை போடு போட்டது. அதைத்தொடர்ந்து அதுபோல விஜயசாந்தி நடிப்பில் பல படங்கள் உருவாகி தமிழில் வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: நீ மட்டும் கஷ்டப்பட்டு வரல.. நானும் தான்! ரஜினியுடன் சண்டை போட்ட அந்த பிரபலம்
உண்மையில் அது நடப்பதற்கு பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் விஜயசாந்தி. 80களில் வெளிவந்த சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். அதன்பின் தெலுங்கு சினிமாவில் நுழைந்து அதிரடி ஆக்ஷன் படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
சில நேரடி தமிழ் படங்களிலும் விஜயசாந்தி நடித்திருக்கிறார். அதில் முக்கியமான படம் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான மன்னன். இந்த படத்தில் திமிர் பிடித்த பெண்ணாக நடித்திருப்பார்.

#image_title
இந்த படத்தில் ரஜினியும், கவுண்டமணியும் தங்களின் முதலாளி விஜயசாந்தியிடம் பொய் சொல்லிவிட்டு சின்னத்தம்பி படத்திற்கு போவார்கள். முதல் காட்சி முதல் டிக்கெட் வாங்கி தங்கச்செயினும், மோதிரமும் வாங்குவதற்காக காத்திருக்கும் போது அதை கொடுக்கும் தொழிலதிபராக விஜயசாந்தியே வருவார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியான ரஜினியும், கவுண்டமணியுடம் முழிக்கும் காட்சிக்கு தியேட்டரே சிரிக்கும். இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய விஜயசாந்தி ‘ கவுண்டமணியுடன் நடிப்பது மிகவும் கஷ்டம். ஏனெனில், நமக்கு சிரிப்பு வந்துவிடும்.
மன்னன் படத்தில் அந்த ஸ்டேஜ் காட்சியில் அவர் பேசும்போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கட்டுப்படுத்திக்கொண்டு அந்த காட்சியில் நடித்தேன். அவர் பேசினா யாராலயும் சிரிக்காம இருக்க முடியாது’ என சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: சுசித்ராவை இயக்குவது நயன்தாராவா? தனுஷின் நடவடிக்கையில தான் இனி எல்லாமே இருக்கு!