“இவரை எல்லாம் ஏன் நடிக்க வைக்குறீங்க?”… சரத்குமாரை கண்டபடி திட்டிய சூப்பர் ஸ்டார் நடிகை…

Sarathkumar
தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படும் சரத்குமார், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

Sarathkumar
சரத்குமார் 1974 ஆம் ஆண்டுக்கான “மிஸ்டர் மெட்ராஸ்” ஆணழகன் போட்டியின் டைட்டிலை கைப்பற்றினார். இதன் மூலம் அவருக்கு பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது. ஆனால் அவரது பெற்றோர் அப்போது திரைப்படங்களில் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லையாம். அதன் பின் பத்திரிக்கையாளராக தனது கேரியரை தொடங்கினார் சரத்குமார்.

Sarathkumar
இதனை தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு சரத்குமாரின் நண்பர் ஒருவர் தெலுங்கில் “சமஜம்லோ ஸ்திரீ” என்ற திரைப்படத்தை தயாரித்து வந்தார். இதில் சுமன், விஜயசாந்தி ஆகியோர் நடித்து வந்தனர். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டிய நடிகர் வராததால் சரத்குமாரை நடிக்க அழைத்திருக்கிறார் தயாரிப்பாளர். ஆனால் சரத்குமாருக்கு அக்காலகட்டத்தில் தெலுங்கு தெரியாதாம். ஆதலால் அவர் மிகவும் தயங்கினாராம்.
எனினும் சரத்குமாரை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து, அத்திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். அதன்படி, விஜயசாந்தியுடன் சில காட்சிகளில் நடித்தார் சரத்குமார். இதனிடையே விஜயசாந்தி, அந்த நாளில் வேறு ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னைக்கு புறப்படவேண்டியிருந்ததால் மிகவும் வேகமாக அக்காட்சியை படமாக்கி முடிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.
இதையும் படிங்க: பைக் கம்பெனியுடன் போட்ட ஒப்பந்தத்தால் சூர்யா படத்துக்கு வந்த சிக்கல்… ஆனால் அங்கதான் ஒரு டிவிஸ்ட்…

Samajamlo Sthree
இதனை தொடர்ந்து சரத்குமாரும் விஜயசாந்தியும் இடம்பெறும் அக்காட்சி படமாக்கப்பட்டபோது, அதில் சரத்குமார் சரியாக நடிக்கவில்லையாம். ஏற்கனவே விஜயசாந்தி சரியான நேரத்திற்குள் சென்னையை அடையவேண்டும் என டென்ஷனோடு இருக்க, இங்கே அதிக டேக்குகள் போய்க்கொண்டிருந்ததால் கோபமடைந்தாராம். “என்ன சார், நடிக்கத் தெரியாதவங்களை எல்லாம் கூப்புட்டு வந்து நடிக்க வைக்குறீங்களே?” என கத்திவிட்டாராம். இது சரத்குமாருக்கு பெருத்த அவமானமாக இருந்ததாம். எனினும் அதன் பின் ஒரு வழியாக அக்காட்சியில் நடித்துக்கொடுத்திருக்கிறார் சரத்குமார்.
இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் சரத்குமார் முன்னணி நடிகராக வளர்ந்தபிறகு மீண்டும் விஜயசாந்தியுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டிய தருணம் வந்ததாம். அப்போது விஜயசாந்தியிடம் “நீங்கள் என்னை ஒரு முறை திட்டினீர்கள். ஞாபகம் இருக்கிறதா?” என கேட்டிருக்கிறார்.

Vijayashanti
அதற்கு விஜயசாந்தி “இல்லையே, நான் இப்போதுதான் உங்களை முதன்முதலில் பார்க்கிறேன்” என கூறியிருக்கிறார். அதன் பின் சரத்குமார் “சமஜம்லோ ஸ்த்ரீ” திரைப்படத்தில் நடந்த விஷயத்தை அவருக்கு ஞாபகப்படுத்தினாராம்.
உடனே விஜயசாந்தி “அய்யோ, அது நீங்கள்தானா? அன்று என்னுடைய சூழ்நிலை அப்படி இருந்தது. வேறு ஒரு படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டியது இருந்தது. அதனால்தான் அப்படி நடந்துகொண்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என கூறினாராம். அதற்கு சரத்குமார் “பரவாயில்லை. உங்கள் இடத்தில் இருந்து பார்த்தால் அப்படி நீங்கள் செய்தது சரிதான். ஒரு படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்குள் செல்லவில்லை என்றால் பெரும் இழப்பு ஏற்படும் என்பது எனக்கு பின்னாளில் நான் பல திரைப்படங்களில் நடித்தபோதுதான் தெரியவந்தது” என கூறினாராம்.