விஜயகாந்தை இந்த நிலைமைல நான் பார்த்தா உடைஞ்சி போயிருவேன்.! நான் பார்க்கவே மாட்டேன்.!

Published on: March 3, 2022
---Advertisement---

ஒரு காலத்தில், விஜயகாந்திற்கு இருந்த கம்பீரம் அரசியலிலும், சினிமா வாழ்விலும் வேறு யாருக்கும் இல்லை எனும் அளவிற்கு யாருக்கும் அஞ்சாத மனுஷாக இருந்தார். அவரது கம்பீர குரலில் பேசினால் திரையரங்கம் மட்டுமல்ல சட்டசபை கூட ஆடித்தான் போகும்.

கிட்டத்தட்ட கடந்த 10 வருடங்களாக அவரது உடல் நிலை கொஞ்சம் மோசமடைந்து அவரது கம்பீர குரல் காணாமலே போய்விட்டது. அவர் நிலைத்து அவரது உடல் நிலை நன்றாக இருந்திருந்தால், கண்டிப்பாக தமிழக அரசியலில் பல மாற்றங்கள் வரும் என அவரது எதிர்ப்பாளர்கள் கூட ஒத்துக்கொள்வாள்.

இதையும் படியுங்களேன் – சமுத்திரகனி எடுத்த படங்களா இது.?! மனுஷன் அதுனால தான் மறுபடியும் உதவி இயக்குனரா போய்ட்டாரா.?!

 

விஜயகாந்திற்கு திரையுலகில் பல நண்பர்கள் உண்டு. அதில் முக்கியமானவர் தான் வாகை சந்திரசேகர். கரகாட்டக்காரன் படத்தில் ஹீரோயின் மச்சானாக வருவாரே அவர் தான். இவுங்க தான் அந்த வெளியூர் ஆட்டக்காரங்களா எனும் இவர் பேசிய வசனங்கள் தான் தற்போதைய தலைமுறைக்கு தெரிந்திருக்கும். நல்ல நடிகர் பின்னர், திமுகவில் சேர்ந்து சில பதவிகளை தன்வசம் வைத்திருந்தார்.

அவர் விஜயகாந்த் பற்றி கூறுகையில், அவன் ஒரு இரும்பு மனிதன். உடலும், மனதும் இரும்பு மாதிரி தான் வைச்சிருப்பான். ஆனால், அவனுடைய தற்போதைய நிலைமையை பாக்கும் போது எனக்கு அவ்வளவு வருத்தமாக இருக்கிறது. இரும்பு மாதிரி இருந்தவன் இப்போ இப்டி ஆயிட்டானே என தோன்றுகிறது. அவனை நேரில் பார்த்தால் நான் உடைஞ்சு போயிருவேன். அதுனால தான் இன்னும் விஜயகாந்தை நான் பார்க்கவில்லை. என மனம் வருந்தி தனது வருத்தத்தை தெரிவித்தார்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment