கேப்டன் அதில் இருக்காரா இல்லையா.?! ‘அந்த’ உண்மையை உளறிய இயக்குனர்.!

Published on: April 5, 2022
---Advertisement---

சினிமாவில் தனக்கென தனி ரசிகர்களை ரஜினி – கமல் உச்சத்தில் இருந்த காலத்திலேயே பெற்று இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவரது படங்கள் ஊரக இடங்களில் ரஜினி, கமல் படங்களையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு சூப்பர் ஹிட்டாகுமாம். அந்தளவுக்கு பாமர மக்களின் நாயகனாக இருந்தார் கேப்டன்.

மேலும் அவர் நல்ல மனிதர் என்று அவருடன் பழகிய அவரை பற்றி தெரிந்த நபர்கள் கூறுவார்கள். அதற்கடுத்து தான் அரசியலில் கால்பதித்து அதிலும் ஆரம்பத்தில் வெற்றிகண்டார். பிறகு தனது உடல்நிலை காரணமாக வெளியுலகில் இருந்து ஒதுங்கிவிட்டார்

தற்போது அவரது நிலையை கண்ட பலரும் அவரது உடல்நிலை குறித்து பெரிதும் வருத்தப்படுவார்கள். சிலர் கண் கலங்கி விடுவார்கள். இவர் நீண்ட வருடம் கழித்து ஒரு படத்தில் சிறு வேடத்தில் நடிக்கிறார் என்ற செய்தி கேட்டதும் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாகினர்.

இதையும் படியுங்களேன் – பிறந்தநாளுக்கு கிடைத்த சூப்பர் கிப்ட்.! தளபதி விஜயின் புது ஹீரோயின் இவர்தான்.!

அது உண்மையா பொய்யா என ரசிகர்கள் மனதில் ஆயிரம் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. இதற்கு விடையை மழை பிடிக்காத மனிதன் பட இயக்குனர் விஜய் மில்டனிடமே கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் மில்டன், ‘ கண்டிப்பாக விஜய்காந்த சார் நடிப்பார். ஆனால், இன்னும் கால்ஷீட் தரப்படவில்லை. அதற்காக தான் காத்திருக்கிறோம். விரைவில் ஷூட்டிங் முடித்து விடுவோம்’ என கூறியுள்ளார்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment