விதியை மீறிய தளபதி விஜய்... அச்சோ என்ன இவ்வளோ ரூபா அபராதமா? எப்படி கட்டுவாரு!!!
தளபதி விஜயிற்கு சாலை விதிகளை மீறியதாக போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்திருக்கும் தகவல் வைரலாக பரவி வருகிறது.
தளபதி விஜய் வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். வம்சி இயக்கி வரும் இப்படத்தின் வெளியீட்டு பிரச்சனை குறித்து அவ்வப்போது சூடான தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கிறது. இணையத்தில் ஒரு பக்கம் வாரிசு பாடல்கள் செம ட்ரெண்ட்டிங்காக இருந்து வருகிறது.
இந்நிலையில், விஜய் தனது பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வந்திருந்தனர். இதுகுறித்த பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜய் கன்னத்தை பிடித்து கிள்ள முயன்ற ரசிகர் ஒருவரிடன் வீடியோவும் விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பல கோடி செலவில் விஜய் கட்டிய பிரமாண்ட பங்களா… எத்தனை கோடி தெரியுமா?
ரசிகராகவே இருந்தாலும் ஒருத்தரிடம் இப்படி அத்துமீறக்கூடாது என பலரும் விஜயிற்கே ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் விஜயிற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.
அந்த பிரியாணி விருந்தில் கலந்துக்கொண்ட போது விஜய் வந்த இன்னோவா காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் இருந்தது. இதை பார்த்த பலரும் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு புகார் அளித்திருந்தனர். அதை தொடர்ந்து, காருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என போலீஸார் தகவல் அளித்துள்ளனர். தற்போது அந்த ஸ்க்ரீன் ஷாட் வைரலாக பரவி வருகிறது.
விஜய் மட்டுமல்ல சினிமா பிரபலங்கள் பலரும் தங்களை யாரும் அடையாளம் கண்டுவிட கூடாது என காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி அதற்கு அபராதமும் கட்டி வருவது எத்தனை ஏற்புடையதாக இருக்கும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்.