விஜயின் தளபதி69 படத்தினை இயக்க போவது நானா? மேடையில் ஓபனாக உடைத்த பிரபல இயக்குனர்!...

Thalapathy69: விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி69 படத்தினை இயக்க இருக்கும் இயக்குனர் தேடல் இன்னமும் நிலவி வரும் நிலையில் அந்த போட்டியில் இருந்து வெளியேறி விட்டதாக ஓபனாக அறிவித்து விட்டார் முன்னணி இயக்குனர்.

லியோ படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். டைம் டிராவல் படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார்.

இதையும் படிங்க: திருமணமாகி 24 வருடம்!.. அஜித்துடன் செம ரொமான்ஸ் பண்ணும் ஷாலினி!.. இது செம பிக்!..

இதை தொடர்ந்து தளபதி69 படத்தில் விஜய் கடைசியாக நடிக்க இருக்கிறார். அப்படம் முடிந்த கையோடு தன்னுடைய சினிமா கேரியருக்கு பெரிய ப்ரேக் எடுத்துக்கொண்டு முழுமையாக அரசியல் பணிக்குள் எண்ட்ரியாக இருக்கிறார். தன்னுடைய ரசிகர் மன்றத்தினை தமிழக வெற்றிக் கழகமாக அறிவித்தார்.

இதை தொடர்ந்து, அவரின் 69வது பட இயக்குனர் யார் என்ற ஆச்சரியம் ரசிகர்களிடம் எழுந்தது. பல முன்னணி இயக்குனர்களின் பெயர் பட்டியலில் இருந்தது. கார்த்திக் சுப்புராஜ் தொடங்கி தற்போது ஹெச்.வினோத் வரை பட்டியலில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: ரஜினிகாந்தின் கூலி படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் இவ்வளோவா? கலக்குங்க!…

இதில், இன்னும் யாரும் முடிவெடுக்கப்படாத நிலையில் யாராக இருக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடம் இன்னமும் நிலவி வருகிறது. இந்நிலையில் வெற்றிமாறன் விஜயின் படத்தினை இயக்கலாம் என்ற பரபரப்பு நிலவி வந்த நிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் அதுகுறித்து வெற்றிமாறனே பேசி இருக்கிறார்.

தனியார் விருது வழங்கும் விழாவில் வெற்றிமாறனிடம் விஜயின் படத்தினை இயக்க போகிறீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், அப்படி நடக்க இப்போது வாய்ப்பே இல்லை என பதிலளித்து இருக்கிறார். இதனால் அதிகாரப்பூர்வமாகவே அவர் போட்டியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

 

Related Articles

Next Story