4 மணிக்கு ஆசைப்பட்டு நாசமா போச்சா!.. லியோ படத்துக்கு இப்போ எத்தனை மணி ஷோ தெரியுமா?
நடிகர் விஜய் நடிப்பில் ஒரு அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள லியோ திரைப்படம் தான் கோலிவுட்டின் அடுத்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு திரைப்படமாக உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்திற்கு பின்னர் டல் அடிக்க தொடங்கிய தியேட்டர்கள் ஆயுதபூஜை ரிலீசாக வெளியாகும் லியோ படத்தின் மூலம் தான் மீண்டும் களைக்கட்ட தொடங்கும்.
இதையும் படிங்க: மாநாடு படத்தில் மாஸ் காட்டினாரே தளபதி 68 படத்தில் அவரும் இருக்காரா?.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க!..
இதை மனதில் வைத்துக்கொண்டு, தியேட்டர் உரிமையாளர்கள் நியூ படத்துக்கு அதிகாலை 4:00 மணி காட்சிக்கு அனுமதி தர வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் மனு போட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. நிச்சயம் விஜயின் லியோ படத்துக்கு அதிகாலை காட்சிக்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது உள்ளத்துக்கே நெல்லை கண்ணாக போய்விட்டது என புலம்பும் நிலைக்கு லியோ படக்குழுவினர் வந்திருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாலை 4 மணி காட்சிக்கு பர்மிஷன் கிடைக்கவில்லை என்றும் வழக்கம்போல புது படங்களுக்கு ஒதுக்கப்பட்டு வரும் காலை 9:00 மணி காட்சிக்கும் தற்போது வேட்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்னு சும்மாவா சொன்னாங்க!.. அப்பாவுக்கு ஒண்ணுன்னோனே ஓடோடி வந்த விஜய்!..
நடிகர் விஜயின் லியோ திரைப்படம் 11:00 மணி காட்சி தான் வெளியாகும் என்கிற திடுக்கிடும் தகவல்களை சினிமா பிரபலங்கள் சிலர் பேசி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், கண்டிப்பாக 4:00 மணி காட்சி கிடைக்கவில்லை என்றாலும் 9:00 மணி காட்சியாவது லியோ படத்திற்கு கிடைக்கும் என படக்குழு உறுதியாக நம்பி வருகிறது. வழக்கம்போல விஜயின் இந்த படத்திற்கும் அரசியல் ரீதியான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
மேலும், விஜயின் லியோ படத்துக்கு தணிக்கையில் மிகப்பெரிய வெட்டு விழும் கூறுகின்றனர். இங்கிலாந்தில், லியோ படம் எந்த ஒரு கட்களும் இல்லாமல் வெளியாகும் என படத்தை ரிலீஸ் செய்யும் அகிம்சா என்டர்டைன்மென்ட் நேற்று ட்வீட் போட்டு இருந்த நிலையில் இந்தியாவில் லியோ படத்திற்கு சிக்கல் உருவாகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms