Connect with us

Cinema News

ஆசையாக கேட்ட அட்லீ… சில கண்டிஷன்களுடன் ஓகே சொன்ன தளபதி…

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் விஜய் நடிக்க கால்ஷூட் வாங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆர்யா, ஜெய், நயன் மற்றும் நஸ்ரியா முக்கிய வேடம் ஏற்று இருந்தனர். படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. ஒரு பக்கம் அட்லீ காப்பி கேட் என்று விமர்சனங்கள் உலா வந்தது. இருந்தும் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.

அட்லீ

தொடர்ந்து, அவருக்கு தளபதி விஜய் வாய்ப்பு கொடுத்தார். ஒன்றல்லா, விஜயின் மூன்று படங்களை அட்லீ இயக்கினார். அத்தனையும் வசூலில் சக்கை போடு போட்டது. இருந்தும் ரசிகர்களிடம் அட்லீக்கு காப்பி கேட் என்ற பெயரே நீடித்தது. தொடர்ந்து, அட்லீ தனது பாலிவுட் படத்தில் தற்போது பிஸியாக இருக்கிறார்.

இதையும் படிங்க: அட்லீ செயலால் நெட்டிசன்களிடம் அசிங்கப்படும் தளபதி… காண்டான ரசிகர்கள்

ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் உருவாகி இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது அட்லீயின் ஆசையாம். அவரே விஜயை பார்த்து பேசி படத்திற்காக 10 நாட்கள் கால்ஷூட்டையும் ஓகே செய்திருக்கிறார்.

அட்லீ

இருந்தும், அந்த ஷூட்டிங் சென்னையில் தான் நடக்க வேண்டும் என விஜய் கூறிவிட்டாராம். அதன்படி, விரைவில் ஜவானின் பத்து நாள் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உறுதியாகும் பட்சத்தில், விஜயின் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாட தயாராகி விட்டனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top