ஜெயலலிதா மாதிரி பண்றாரு... விஜயை விளாசிய தயாரிப்பாளர்!

#image_title
விஜய் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல நடந்து கொள்கிறார் என தயாரிப்பாளர் விளாசி இருக்கிறார்.
கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியான கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் தடுமாறி வருகிறது. பண்டிகை தினம் இல்லை என்றாலும் தனித்தே படத்தினை ரிலீஸ் செய்தார் விஜய்.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் வசூலில் தனித்து தெரியவில்லை. படத்தின் சர்ப்ரைஸ் காட்சிகளை சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களே வெளியிட்டு விட்டனர்.
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இந்தநிலையில் தயாரிப்பாளர் ராஜன் சமீபத்திய பேட்டியில் விஜயை விட்டு விளாசி இருக்கிறார்.

#image_title
கட்சிக்கொடியை 'மட்ட' பாடலில் திரிஷா வழியாக விஜய் முன்பே அறிமுகப்படுத்தி விட்டார். அவர் தான் வருங்கால கொள்கை பரப்பு செயலாளர். ஜெயலலிதா போல ரசிகர்கள், தொண்டர்கள் யாரையும் நெருங்க விடுவதில்லை.
துபாய் பவுன்சர்கள் புடைசூழ வலம் வருகிறார். காந்தி என படத்தில் பெயர் வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றார்போல அவர் நடந்து கொள்ளவில்லை. விஜய் என்ன அவ்வளவு ஒழுக்கமானவரா?
என சரமாரியாக கேள்விகள் எழுப்பி இருக்கிறார். மேலும் அஜித் ரசிகர்கள் அவர்மேல் உயிரையே வைத்துள்ளனர். அவர்கள் என்றும் விஜய் ரசிகராக மாற மாட்டார்கள் என்றும் கருத்து தெரிவித்து உள்ளார்.
அவரின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கட்சி மாநாடு தள்ளிப்போகும் சூழ்நிலையில் விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன. இதற்கு அவர் எப்படி பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதை நாம் பார்க்கலாம்.
- Tags
- actor vijay