ஒரே நைட்டில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பிய விஜய்! அரசியல் ஆட்டத்தை இப்பவே ஆரம்பிச்சிட்டாரா?
Leo Audio Launch: இன்று பெரும் பேசுப்பொருளாக இருப்பது லியோ படத்தின் ஆடியோ வெளியீடு விழா நிறுத்தப்பட்டதுதான். ஆனால் இதைத்தான் விஜய் விரும்பியதாகவும் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்தார். அதாவது இது அரசியலுக்கான் ஆரம்பப்புள்ளி என்று அவர் கூறினார்.
பெரும் எதிர்பார்ப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் லியோ. லோகேஷ் இயக்கத்தில் லலித் தயாரிப்பில் அனிருத் இசையில் தயாரான படம்தான் லியோ. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அதுபோக சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜூன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்து வெளியாகும் திரைப்படம் லியோ.
இதையும் படிங்க: இவனுங்கள வச்சு அரசியல் பண்ணா விளங்கும்! தன் கைய வச்சே கண்ண குத்திக்கிற கதையா மாறிப்போன விஜய்
அதனாலேயே இந்தப் படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. அதற்கு முதற்கட்டமாக படத்தின் போஸ்டர்கள், முதல் சிங்கிள் என அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது படக்குழு.
இதற்கெல்லாம் ஒரு படி மேலாக நேற்று வந்த அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்க திடீரென லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அதிக டிக்கெட் தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்டது என்ற அறிவிப்பை வெளியிட்டது.
இதையும் படிங்க: செகன்ட் பார்ட்டே தேறுமான்னு தெரியல!. அதுக்குள்ள 3வது பார்ட்டா?!.. அதுவும் அந்த நடிகரா?!…
இது சம்பந்தமாக பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த முதலில் விஜய்க்கு விருப்பமே இல்லை என்பது போல வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்தார். ஏனெனில் விழாவில் அரசியல் பேசுவாரா? பேசமாட்டாரா? என்ற தொணியில் ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.
அப்படியே பேசினாலும் தமிழக அரசை எதிர்த்து பேசுவாரா? இல்லை ஒன்றிய அரசை எதிர்த்து பேசுவாரா? தமிழக அரசை எதிர்த்து பேசினால் அவர் படம் வெளிவருவதில் சிக்கல். ஒரு வேளை அரசியலை பற்றியே பேசாமல் போய்விட்டால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைவார்கள். இத்தனை பிரச்சினைகளையும் தலையில் வைத்துக் கொண்டு விஜய் பிதுங்கி கொண்டிருந்தார் என்று பிஸ்மி கூறினார்.
இதையும் படிங்க: பல மாசம் ஆகியும் கிளைமேக்ஸ் வரல!.. காக்க வைத்த இயக்குனர்!.. தூக்கியெறிந்த அஜித்!..
அதனால்தான் இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கவே விஜய் இந்த ஆடியோ விழாவை ரத்து செய்ய வைத்திருக்கலாம் என்றும் கூறினார். அதற்காக இவ்ளோ ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டாமே என்று கூட கேட்கலாம். ஆனால் விஜய் ஒரு நடிகர் மட்டுமில்லை. ஒரு அரசியல்வாதியும் கூட என நிரூபித்துவிட்டார். இந்த மாதிரி ஒரு ஆடியோ லாஞ்சையே ஒரு பேசுப் பொருளாக பயன்படுத்தி விட்டார் விஜய் என பிஸ்மி கூறினார்.