அப்பனுக்கு சளைச்சவன் இல்லனு காட்டிட்டாரு! ஜேசன் விஜயின் மாஸ்டர் ப்ளானில் இணைந்த நடிகர்கள்

by Rohini |
sanjay
X

sanjay

Actor Jason Vijay: தற்போது சூடான செய்தியாக இணையத்தில் உலா வந்து கொண்டிருப்பது விஜயின் வாரிசான ஜேசன் விஜய் தன்னுடைய இயக்கத்தில் யாரை நடிக்க வைக்க போகிறார் என்பதுதான். எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் ஜேசனுக்கு விஜய் சேதுபதி என்றால் மிகவும் பிடிக்கும் என்றும் அவரை நடிக்க வைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

மற்றும் சிலர் ஜேசன் விஜய் அஜித்தை வைத்து படம் எடுக்க வாய்ப்பிருப்பதாக கூறினார்கள். ஏனெனில் ஜேசன் விஜய் இயக்கும் படத்தின் பி.ஆர்.ஓ அஜித்தின் மேலாளராம். அதனால் கூட அஜித் நடிக்க வாய்ப்புள்ளதாக தேவையில்லாத வதந்திகள் கிளம்பின.

இதையும் படிங்க : இவரே சோலிய முடிச்சுருவார் போலயே! வாண்ட்டடா போய் பாதாளத்தில் விழும் சூரி – ஆட்டுவிப்பது இவராச்சே

ஆனால் ஜேசன் விஜயை பொறுத்தவரைக்கும் முழுவதுமே சினிமா சம்பந்தப்பட்ட படிப்புகளை வெளி நாடுகளில் முடித்திருப்பதால் எதற்கும் விட்டுக் கொடுத்துப் போக மாட்டார் என்றும் அவரின் ப்ளான் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்றும் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜேசன் விஜய் கண்டிப்பாக விஜய் சேதுபதியை வைத்தோ அஜித்தை வைத்தோ படத்தை இயக்க மாட்டாராம். ஏன் மற்ற முன்னனி நடிகர்கள் பக்கமும் போகமாட்டாராம். அவரின் மனதில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களை வைத்துதான் படம் பண்ணவேண்டும் என எண்ணம் இருக்கின்றதாம்.

இதையும் படிங்க : ரெண்டு பக்கமும் குத்துனா எப்படி தாங்குறது… #Boycottjawan ட்ரெண்டாகும் ஹாஸ்டேக்!

குறிப்பாக கவின், ஹரீஷ் கல்யாண், அதர்வா போன்ற நடிகர்களின் பெயர்கள் தான் ஜேசன் விஜயின் மனதிலும் இருக்கிறதாம். ஏற்கனவே கவின் தொடர்ந்து இரண்டு படங்களில் ஹிட் கொடுத்ததால் ஒரு வேளை அவரை வைத்து கூட படத்தை எடுக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

Next Story