Cinema News
மகனுக்காக இத கூட பண்ணல! தனித்தே விடப்பட்ட ஜேசன் விஜய் – அடுக்கடுக்கான உண்மைகளை கூறிய பிரபலம்
தற்போது கோலிவுட்டில் பெரிய டாக்காக போய்க் கொண்டிருப்பது விஜயின் வாரிசு லைக்கா நிறுவனத்துடன் கை கோர்த்திருப்பதுதான்.யாரும் எதிர்பாராத வகையில் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி இணையத்தில் புகைப்படங்கள் வைரலானது.
லைக்கா நிறுவனத்தால் முதன் முதலில் ஜேசன் விஜய் தன்னுடைய அறிமுகத்தை பதிவு செய்திருக்கிறார். ஒரு பெரிய முன்னனி நடிகரின் வாரிசு அதுவும் கோலிவுட்டில் வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் விஜயின் மகன் இயக்குனராகிறார் என்றால் சும்மாவா?
இதையும் படிங்க : விஜயகாந்தோடு நடிக்க மாட்டேன்!. கறாரா சொன்ன ரஜினி!.. கேப்டன் கொடுத்த பதிலடி…
அடுத்தடுத்த பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. மகன் இயக்கத்தில் அப்பா நடிப்பாரா? இல்லை யார்தான் அவரின் முதல் ஹீரோவாக இருப்பார்? என்றெல்லாம் பல சந்தேகங்கள் ரசிகர்கள் உட்பட கோடம்பாக்கத்திலேயே இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஜேசன் விஜயின் இயக்கத்தில் விஜய் கேமியோ ரோலாக பண்ணுவாரா? என்ற கேள்வியை நிரூபர் ஒருவர் தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேட்டார். அதற்கு பதில் கூறிய தனஞ்செயன் ‘கண்டிப்பாக அது நடக்க வாய்ப்பில்லை, ஜேசன் விஜய் யாரையும் சார்ந்து வளர்ந்தவர் இல்லை. சின்ன வயதில் இருந்தே வெளிநாடுகளில் படித்தவர்.அதனால் அந்த மாதிரி ஒரு காம்ப்ரமைஸை ஜேசன் விஜய் கையில் எடுக்கமாட்டார்.’ என்று கூறினார்.
மேலும் கூறிய தனஞ்செயன் ‘விஜயும் கேமியோ பண்ணமாட்டார். ஏற்கனவே ஜவான் படத்தில் விஜய் கேமியோனு சொன்னார்கள். ஆனால் அது இப்போது இல்லை. ஒரு பெரிய நடிகர். ஒரு சில நிமிட காட்சிகளில் நடிப்பது என்பது எப்படி சாத்தியமாகும். ஒரு வேளை கதைக்கு முக்கியத்துவம் என்றால் விஜய் நடிப்பார். மற்றபடி கேமியோ என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று கூறினார்.
இதையும் படிங்க : இந்த நடிகர மட்டும் வச்சு நான் டைரக்ட் பண்ண மாட்டேன்! ஷாக் தகவலை கூறிய தளபதி வாரிசு
அதுமட்டுமில்லாமல் விஜய் எப்போதும் தன்னால் தன் மகன் வளரவேண்டும் என்றும் நினைக்கமாட்டார். ஏன் தன் மகன் இயக்குனராகிறார் என்பதை தன் ட்விட்டர் பக்கத்தில் கூட போடவில்லை. அந்தளவுக்கு தன் மகன் விஷயத்தில் தன்னுடைய ஈடுபாடு இருக்க கூடாது என நினைப்பவர் என்றும் தனஞ்செயன் கூறினார்.