
Cinema News
சிக்கலா? அதெல்லாம் அக்குல அடக்கிடுவோம்.. பிரச்சினையாலேயே பப்ளிசிட்டியாகும் தளபதி 68!
இன்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது லியோ படத்தின் ஒரு பாடலின் போஸ்டர் . அதை விஜய் ரசிகர்கள் சரமாரியாக கொண்டாடி வருகிறார்கள். அந்த போஸ்டரில் விஜய் வாயில் சுருட்டு வைப்பது போன்று போஸ் கொடுத்துள்ளார். ஒரு விதத்தில் நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் பாடலில் அணிந்த காஸ்ட்யூம் மாதிரியும் அந்த போஸ்டரில் காணப்படுகிறார்.
என்னவாக இருந்தாலும் இன்று விஜய் ரசிகர்களுக்கு ஒரு லட்டு சாப்பிட்ட மாதிரியான உணர்வில் தான் இருப்பார்கள். மேலும் வருகிற 22 ஆம் தேதி விஜயின் பிறந்த நாள் என்பதால் லியோ படத்தை பற்றிய கூடுதல் அப்டேட்டும் வரும் என ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

vijay1
லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தோடு ஒரு புதிய படத்தில் இணைகிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத அந்தப் படத்திற்கு தளபதி 68 என பெயர் வைத்து டிரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகரகள். பொதுவாகவே ஒரு படம் வெளியாகி அந்தப் படத்தில் சர்ச்சைகள் ஏதும் இருந்தால் மட்டுமே வழக்கை சந்திக்கும்.
ஆனால் விஜயின் இந்த தளபதி 68 படம் சற்று வித்தியாசமாக பூஜை போடுவதற்கு முன்பே ஒரு பிரச்சினையை சந்தித்திருக்கிறது. இந்தப் படத்தின் மீது பொது நல வழக்கு ஒன்று போடப்பட்டுள்ளதாம். அதாவது இந்த படத்திற்கு விஜய் 200 கோடி சம்பளம் வாங்கப்போவதாகவும் படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது.

vijay2
அதனால் இந்தப் படம் திரையரங்கிற்கு வரும் போது மக்களிடம் அதிக டிக்கெட் விலைக்கு படத்தை வெளியிட வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தால் முன்கூட்டியே இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அதிக டிக்கெட் விலைக்கு படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்ற வாக்குறுதியை ஒப்பந்தமாக கைப்பட கொடுக்க வேண்டும் என்று பொது நல வழக்கு போடப்பட்டிருக்கிறதாம்.
ஆனால் விஜய் படத்தை பொறுத்தவரைக்கும் எந்தப் படம் ரிலீஸானாலும் பிரச்சினை இல்லாமல் வராது. அதுவும் விஜய்க்கு ஒருவிதத்தில் நல்லதாகவே அமைந்து விடுகிறது. ஏனெனில் இதன் மூலம் படத்திற்கான புரோமோஷனும் உருவாகி விடுகிறது. ரசிகர்களுக்குள்ளும் ஒரு வித எதிர்பார்ப்பையும் அதிகரித்து விடுகின்றன.
இதையும் படிங்க : சத்தியமா இனிமே அதை பண்ணவே மாட்டேன்!.. சொன்னதை காற்றில் பறக்கவிட்ட விஜய்..