முட்டிக்கிச்சு: முன்னணி டிவியுடன் நடந்த பஞ்சாயத்து... ஆத்திரத்தில் விஜய் எடுத்த புது ரூட்?

இன்றைக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் - சன் டிவி இடையிலான சண்டை தான் தற்போது கோலிவுட்டில் பல்வேறு புகைச்சல்களை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று தமிழ் சினிமாவின் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் விஜய்க்கு ஆரம்பம் அத்தனை எளிதாக இல்லை. தந்தை சந்திரசேகர் உதவியுடன் இந்த இடத்தினை பிடிப்பதற்கு அவர் பட்ட கஷ்டம் ஏராளம். தற்போது அரசியல் ஆசை காரணமாக அடுத்த படத்துடன் ஓய்வினை அறிவித்து இருக்கிறார் விஜய்.

இது அவரது ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை அளித்தாலும் கூட அரசியல் ஆசை யாரைத்தான் விட்டது என்பதற்கேற்ப அவர்கள் விஜய்க்கு போஸ்டர் அடிக்க தயாராகி விட்டனர். இந்த சூழ்நிலையில் விஜய்க்கும்- சன் நிறுவனத்திற்கும் இடையே முட்டல், மோதல், உரசல்கள் நிகழ தன்னுடைய The GOAT படத்தின் உரிமையினை ஜீ தமிழ் நிறுவனத்திற்கு விற்று இருக்கிறார் விஜய்.

சன் டிவி

2004 காலகட்டத்தில் விஜய்-அஜித் இருவருக்கும் இடையே பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்த நேரம். தொடர்ந்து விஜய் பாடல்களை சன் மியூசிக் நிறுவனம் ஒளிபரப்பி அவரை தமிழ்நாட்டின் பட்டிதொட்டி, மூலை முடுக்குகளில் எல்லாம் கொண்டு சேர்த்தது. பாடல்கள், படங்கள், பேட்டிகள் என விஜயை வளர்த்துவிட்ட பெருமையும் சன் நிறுவனத்துக்கு தான் சேரும். இதனால் விஜயின் திரையுலக வளர்ச்சியில் சன் நிறுவனத்திற்கும் ஒரு முக்கிய இடமுண்டு.

கடைசி பேட்டி

சில வருடங்களாக மிகவும் அமைதி காத்து வந்த விஜய் கடைசியாக பீஸ்ட் படத்திற்காக சன் டிவிக்கு பேட்டி அளித்திருந்தார். அதேபோல ஒரு பேட்டி விவகாரத்தில் தான் தற்போது விஜய்-சன் இருவருக்கும் முட்டிக்கொண்டு இருக்கிறது. இதற்கான பின்னணியை பார்ப்போம்.

GOAT

வெளியில் மகிழ்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வந்தாலும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு இப்படம் மிகப்பெரிய செலவை இழுத்து விட்டுள்ளதாம். இதற்கு விஜய்க்கு அளிக்கப்பட்ட சம்பளமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால் அதை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறது.

ஏகப்பட்ட நட்சத்திரங்கள்

விஜய், பிரபுதேவா, பிரஷாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, அஜ்மல் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர். இதனால் போட்ட பட்ஜெட் கையைத்தாண்டி எங்கோ சென்றுள்ளது. போதாதற்கு விஜயை டி-ஏஜிங் முறையில் இளமையாக காட்ட வெங்கட் பிரபு எடுக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு அக்னி பரீட்சையாக மாறியுள்ளது.

விற்பனை

படத்திற்கு தாம் தூம் என செலவு செய்த ஏஜிஎஸ் அவை அனைத்தையும் சாட்டிலைட், ஓடிடி, வெளிநாட்டு உரிமைகளில் எடுத்து விடலாம் என கனவு கண்டு கொண்டிருந்தது. அத்தனைக்கும் ஆசைப்படு என்பது போல ஆசை மட்டும் தான் ஏஜிஎஸ்க்கு மிச்சம் ஆகியுள்ளது. ஓடிடி உரிமை கூட ஓரளவு போய்விட்டது.

சாட்டிலைட்

ஆனால் சாட்டிலைட் உரிமை தான் கடைசி வரை சோதித்து விட்டது. சன் நிறுவனத்திடம் எவ்வளவோ முட்டி மோதியும் ரூபாய் 55 கோடியை தாண்டவில்லையாம். இத்தனைக்கும் விஜயின் கடைசி படத்தினை 80 கோடி கொடுத்து வாங்கி இருந்தனர்.

கறார் கண்டிஷன்கள்

55 கோடி ரூபாய் என்றாலும் பரவாயில்லை என ஏஜிஎஸ் நிறுவனம் இறங்கி வர சன் டிவி பதிலுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டுள்ளது. படம் ஒளிபரப்பாகி ஒரு மாதத்திற்குள் படத்தை டிவியில் போட்டு விடுவோம். நாங்கள் சொல்லும் தேதிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும்.படத்தில் அரசியல் சர்ச்சைகள் இருக்கக்கூடாது. என லிஸ்ட் நீண்டுகொண்டே சென்றுள்ளது. எல்லாவற்றுக்கும் தயாரிப்பு நிறுவனம் ஓகே சொல்லியுள்ளது.

லாஸ்ட் கண்டிஷன்

கடைசியாக விஜய் இரண்டு மணி நேரம் எங்களுக்காக ஒதுக்கி பேட்டி தர வேண்டும் என சன் நிறுவனம் கண்டிஷன் போட இதைக்கேட்ட விஜய் கறாராக நோ சொல்லி விட்டாராம். இதையடுத்து தான் ஜீ தமிழ் நிறுவனத்திற்கு படத்தின் சாட்டிலைட் உரிமை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடைசி படம்

முட்டல், மோதல்களால் தன்னுடைய கடைசி படத்தையும் சன் நிறுவனத்திற்கு கொடுக்க மாட்டார் என்றே தெரிகிறது. எனவே வரும் நாட்களில் இது அவருக்கு பின்னடைவாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

அரசியல் என்ட்ரி

தமிழ்நாடு தாண்டியும் சன் நிறுவனங்கள் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளன. அதே நேரம் விஜய் தன்னுடைய அடுத்த கட்டத்திற்காக அரசியலில் இறங்கி இருக்கிறார். இன்னும் அவர் போக வேண்டிய தூரம் ஏராளம் இருக்கிறது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் விஜய் சன் நிறுவனத்தை பகைத்துக்கொண்டு இருப்பது அவருக்கு நஷ்டமாக முடியுமா? என கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த கேள்விகளுக்கு விஜயின் பதில் என்னவாக இருக்கும் என நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்...!

 

Related Articles

Next Story