டோலிவுட்டிற்கே இருக்கும் செண்டிமென்ட்!.. தலைகீழாக மாற்றிய விஜய் படம்!..

by Rohini |   ( Updated:2023-03-03 17:01:17  )
vijay
X

vijay

தமிழ் சினிமாவில் தன்னுடைய படங்களின் மூலம் வசூலை வாரி இறைத்து வருகிறார் நடிகர் விஜய். கிட்டத்தட்ட எம்ஜிஆர், ரஜினிக்கு பிறகு விஜய் தான் ஒரு வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார். தற்போது லியோ படத்தில் படு பிஸியாக நடித்து வரும் விஜய் அடுத்தடுத்த படங்களிலும் கமிட் ஆகியிருக்கிறார்.

அவரின் கெரியரில் ஒரு மாபெரும் வெற்றியை பதிவு செய்த திரைப்படம் என்றால் அது ‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படம் தான். அந்தப் படம் நேரிடையாக கேரளாவில் ரிலீஸ் செய்து மாபெரும் வெற்றிப் படமாக மாறி கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் உருவானதுக்கு அந்தப் படமும் ஒரு வகையில் காரணமாகும். அதே போல் தெலுங்கில் அந்தப் படத்தின் ரிமேக்கில் நடிகர் நாகர்ஜுனா நடிப்பதாக கூறியிருக்கிறார்.

vijay1

vijay1

ஹீரோயின் சிம்ரன் தான். நாகர்ஹுனா ஆர்.பி,சௌத்ரியிடம் ‘ இந்தப் படத்தின் ரீமேக்கில் நான் நடிக்கிறேன், நீங்களே தெலுங்கிலும் இந்தப் படத்தை தயாரித்து வெளியிடுங்கள்’ என்று கூறினாராம். அதே போல படத்தின் படப்பிடிப்புகள் பாதி முடிவடைந்து க்ளைமாக்ஸ் காட்சி வரும் போது திடீரென க்ளைமாக்ஸ் காட்சியை மாற்றுங்கள் என்று சொன்னாராம்.

ஆர்.பி,சௌத்ரி ஏன் என்று கேட்க அதற்கு நாகர்ஜுனா ‘படத்தின் கதைப்படி ஒரு கலெக்டர் தாராளமாக வெளியே ஓடி வருவது என்பதை செண்டிமெண்டாக தெலுங்கு ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள், ஆகவே அந்தக் காட்சியை மாற்றலாம்’ என்று சொல்ல சௌத்ரியோ ‘செண்டிமெண்ட் என்பது அனைவருக்கும் பொதுவானதே, முதலில் தமிழ், தெலுங்கு என இருவரும் ஒன்றாக இருந்தவர்கள் தான், அதனால் இங்க இருக்கிற செண்டிமெண்ட் தான் அங்கேயும் இருக்கும் , நீங்கள் தயங்காமல் நடிங்கள், அதையும் மீறி படம் தோல்வி அடைந்தால் உங்கள் சம்பளத்தில் இரண்டு மடங்கு சம்பளத்தை நான் தருகிறேன்’ என்று கூறினாராம்.

vijay2

vijay2

நாகர்ஜுனாவும் அரை மனதுடன் தான் அந்தப் பட க்ளைமாக்ஸில் நடித்திருக்கிறார். படம் ரிலீஸ் ஆகும் போது சௌத்ரி ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் ரசிகராக உட்கார்ந்து பார்க்க சிம்ரன் ஓடி வரும் காட்சிக்கு தான் கைத்தட்டல்கள் அதிகமாக இருந்ததாம். உடனே நாகர்ஜுனா ஆளுயர மாலையை எடுத்துக் கொண்டு வந்து சௌத்ரிக்கு அணிவித்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்தாராம். இந்த சுவாரஸ்ய தகவலை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.

Next Story